முதன்முறையாக... வித்தியாசமான ஃபீலிங்கா இருக்கு.! செம ஹேப்பியில் அனிதா சம்பத்! ஏன்னு பார்த்தீங்களா!!

முதன்முறையாக... வித்தியாசமான ஃபீலிங்கா இருக்கு.! செம ஹேப்பியில் அனிதா சம்பத்! ஏன்னு பார்த்தீங்களா!!


anitha-sampath-share-about-niroop-call-to-her

டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டார் ஓடிடி தளத்தில் தொடங்கி நாளுக்கு நாள் விறுவிறுப்பாகவும், சுவாரஸ்யமாகவும் சென்ற நிகழ்ச்சி பிக்பாஸ் அல்டிமேட். இந்த நிகழ்ச்சி கடந்த சில தினங்களுக்கு முன்பு முடிவுக்கு வந்தது.16 பிரபலங்கள் போட்டியாளர்களாக கலந்துகொண்ட இந்த நிகழ்ச்சியில் பாலா வெற்றியாளர் ஆனார்.

மேலும் நிரூப் இரண்டாவது இடத்தையும், மூன்று மற்றும் நான்காவது இடத்தை ரம்யா பாண்டியன் மற்றும் தாமரை ஆகியோர் பெற்றனர். பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்ட அனிதா வீட்டில் பல முறை டபுள் மீனிங்கில் பேசி நெட்டிசன்கள் மத்தியில் சர்ச்சையில் சிக்கினார்.

anitha sampath

அதேபோல அவர் வீட்டில் நிரூபிடம்தான் அதிக நேரத்தை செலவழித்து வந்தார். இருவரும் நெருக்கமாக பழகி வந்தனர். இந்த நிலையில் அண்மையில் அனிதாவிற்கு நிரூப் போன் செய்துள்ளார். அந்த ஸ்கிரீன்ஷாட் புகைப்படத்தை பகிர்ந்த அவர், 70 நாள் நட்பு, ஆனா இப்போதான் முதல் முறையாக கால் வருது. முதன்முறையாக போன்ல பேசுறோம். இது வித்தியாசமான பீலிங்கா இருக்கு என பதிவிட்டுள்ளார். இது வைரலான நிலையில் பலரும் பலவிதமான கருத்துக்களை வெளியிட்டு வருகின்றனர்.