சினிமா

இவ்ளோ நாள் அப்படியில்லை! எனக்கே புதுசா இருக்கு! பிக்பாஸ் அனிதா கணவர் வெளியிட்ட திடீர் பதிவு! எதனால் தெரியுமா?

Summary:

பிக்பாஸ் அனிதா சம்பத்தின் கணவர் பிரபாகரன் தனது மனைவியை இவ்வளவு நாள் பிரிந்ததே கிடையாது. ரொம்ப மிஸ் செய்கிறேன் என வருத்தத்துடன் கூறியுள்ளார்.

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பிக்பாஸ் சீசன் 4ல் 16 போட்டியாளர்களுள் ஒருவராக கலந்துகொண்டவர் செய்தி வாசிப்பாளர் அனிதா சம்பத்.  இவர் ஒரு சில படங்களிலும் நடித்துள்ளார். இவருக்கென ஏராளமான ரசிகர்கள் பட்டாளமே உள்ளது.அனிதா சம்பத் பிக்பாஸ் வீட்டிற்குள் நுழைந்த சில நாட்களிலேயே சுரேஷ் அவர்களிடம் ஏற்பட்ட வாக்குவாதம் மற்றும் சிறு விஷயங்களுக்கும் சட்டென கோபப்படுதல் என கடுமையாகவே இருந்து வந்தார்.

ஆனால்  இவர் தனது வாழ்க்கையில் கடந்து வந்த கஷ்டங்கள், தனது அம்மா குறித்து  கூறியது மக்களிடையே பெரும் வருத்தத்தை ஏற்படுத்தியது. அனிதா சம்பத், பிரபாகரன் என்பவரை காதலித்து கடந்த சில மாதங்களுக்கு முன்புதான் திருமணம் செய்து கொண்டார்.

இந்நிலையில் தனது காதல் மனைவி பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு சென்ற நிலையில், அவரது தற்காலிக பிரிவை தாங்கிக் கொள்ள முடியாத பிரபாகரன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், இன்றுடன் 30 நாள் ஆகிறது. நாங்கள் காதலிக்க ஆரம்பித்த நாளில் இருந்து இவ்வளவு நாட்கள் பார்க்காமல், பேசாமல் இருந்தது கிடையாது. முதன்முறையாக எனக்கே இது புதுசாக இருக்கிறது. நான் எனது செல்லம்மாவை மிகவும் மிஸ் செய்கிறேன் என வருத்தத்துடன் பதிவிட்டுள்ளார்.


Advertisement