சினிமா

திடீரென வெளியேற்றப்பட்ட சனம் ஷெட்டி! ஒத்தவரியில் அனிதாவின் கணவர் கூறியுள்ளதை பார்த்தீர்களா!

Summary:

சனம் வெளியேறியது குறித்து அனிதாவின் கணவர் பிரபாகரன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில்,இது நியாயம் இல்லை என்று பதிவிட்டுள்ளார்.

விஜய் தொலைக்காட்சியில் 16  போட்டியாளர்களுடன் தொடங்கிய பிக்பாஸ் சீசன் 4 நிகழ்ச்சி 61 நாட்களை கடந்து வெற்றிகரமாக சென்றுகொண்டிருக்கிறது. இந்த சீசனில் இதுவரை ரேகா, வேல்முருகன், சுரேஷ் சக்ரவர்த்தி, சுசித்ரா, சம்யுக்தா ஆகிய 5 பேர் நிகழ்ச்சியில் இருந்து வெளியேற்றப்பட்டுள்ளனர். 

மேலும் வார இறுதியான நேற்று ஆரி, அனிதா, சனம், நிஷா, ரம்யா, ஆஜித், ஷிவானி ஆகிய 7 பேரும் நாமினேட் செய்யப்பட்டிருந்த நிலையில் சனம் குறைந்த வாக்குகளை பெற்று பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறினார். இதனால் போட்டியாளர்கள் மற்றும் ரசிகர்கள் அனைவரும் பெரும் அதிர்ச்சி அடைந்தனர்.

sanam-shetty - Tamil Beauty Tips

சனம் மனதில் பட்டதை நேர்மையாகவும் தைரியமாகவும் பேசக்கூடியவர். இதனால் அவர் சிலரது எதிர்ப்பை பெற்றாலும், பல சமயங்களில் பலரது பாராட்டையும் பெற்றுள்ளார். இந்நிலையில் நேற்றைய தினம் சமூக வலைதளங்களில் #NoSanamNoBiggboss என்ற ஹேஷ்டேக் வைரலானது. இந்நிலையில் சனம் வெளியேறியதால் கதறி கதறி அழுத அனிதாவின் கணவர் பிரபாகரன்  தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் "இது நியாயம் இல்லை" என்று பதிவிட்டுள்ளார்.


Advertisement