இந்த டீம் கூட சேராதீங்க ரொம்ப மோசமானவங்க!! ரசிகரின் கமெண்ட்டிற்கு அனிதா கொடுத்த பதிலை பார்த்தீர்களா!anitha answer to fans who comment her photo

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி ரசிகர்களிடையே மாபெரும் வரவேற்பை பெற்ற நிகழ்ச்சி பிக்பாஸ். இதன் நான்காவது சீசன் கடந்த சில மாதங்களுக்கு முன்பு தொடங்கிய நிலையில் நாளுக்கு நாள் சுவாரசியங்களுடனும், விறுவிறுப்பாகவும் சென்று கொண்டிருந்த நிலையில் கடந்த ஜனவரி மாதம் 17ம் தேதியுடன் முடிவுக்கு வந்தது.

இந்த பிக்பாஸ் நிகழ்ச்சியில் ரேகா, அறந்தாங்கி நிஷா, ரம்யா பாண்டியன், அனிதா சம்பத், ஷிவானி, அர்ச்சனா, சுசித்ரா, கேப்ரில்லா, சம்யுக்தா, சோமசேகர், பாலா,வேல்முருகன், ஆரி, சக்ரவர்த்தி, ஜித்தன் ரமேஷ், ஆஜித் ஆகியோர் போட்டியாளர்களாக கலந்து கொண்டனர். இதில் ஆரி வெற்றியாளர் ஆனார்.  பிக்பாஸ் வீட்டில் அர்ச்சனா என்ட்ரிக்கு பிறகு ரியோ, நிஷா, கேப்ரில்லா, சோம் சேகர் இணைந்து லவ் பேட் என்ற குழு உருவானது. அதனை சக போட்டியாளர்கள் மற்றும் ரசிகர்கள் என அனைவரும் விமர்சித்தனர்.

anitha sampath

இந்நிலையில் பிக்பாஸ் வெற்றிக் கொண்டாட்டம் சமீபத்தில் நடைபெற்றுள்ளது. அப்பொழுது பெண் போட்டியாளர்கள் அனைவரும் ஒன்றாக புகைப்படம் எடுத்துள்ளனர். அதனை அனிதா சம்பத் வெளியிட்டிருந்த நிலையில் அதனை கண்ட ரசிகர் ஒருவர் இந்த டீம் கூட சேராதிங்க மோசமானவர்கள் என்று கமெண்ட் செய்துள்ளார். அதற்கு அனிதா, எல்லோரும் நல்லவங்கதான். கேம்லாம் முடிஞ்சு போச்சு என்று பதிலளித்துள்ளார்.
             

          anitha sampath