தர்பார் குறித்த முக்கியமான புதிய அப்டேட்டை வெளியிட்ட அனிருத்.!செம குஷியான ரசிகர்கள்!!

தர்பார் குறித்த முக்கியமான புதிய அப்டேட்டை வெளியிட்ட அனிருத்.!செம குஷியான ரசிகர்கள்!!



Anirudh tweet about tharbar

இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில், சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் வெளியான பேட்ட. இந்த படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று மாபெரும் வெற்றிபெற்றது. இந்நிலையில் பேட்ட படத்திற்கு பிறகு AR முருகதாஸ் இயக்கத்தில் ரஜினிகாந்த் தர்பார் படத்தில் நடித்துவருகிறார். மேலும் இதில் அவர் போலீஸ் ஐ.பி.எஸ். அதிகாரியாக நடித்துவருகிறார். அவருக்கு ஜோடியாக லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா நடித்துவருகிறார். 

இந்நிலையில் இதன் பட பிடிப்பு வேலைகள் முடிவடைந்த நிலையில் படம் வெளியாவதற்கான பின்னணி வேலைகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. மேலும் படம் வரும் பொங்கலுக்கு ரிலீசாகும் எனவும் தகவல்கள் வெளிவந்துள்ளது. 

Motion poster

இந்நிலையில், தர்பார் படத்தின் இசையமைப்பாளர் அனிருத் தர்பார் படம் குறித்த புதிய அப்டேட் ஒன்றை தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அதில் அவர் தர்பார் படத்தின் தீம் மியூசிக்குடன் கூடிய மோஷன் போஸ்டர் வருகிற நவம்பர் 7-ந் தேதி வெளியிடப்படும் என தெரிவித்துள்ளார். அனிருத்தின் அறிவிப்பால் ரஜினி ரசிகர்கள் உற்சாகமடைந்துள்ளனர்.