கேப்டன் மகனின் படைதலைவன்.! 4 நாட்களில் செய்துள்ள வசூல் இவ்வளவா.! வெளிவந்த தகவல்!!
"ரஜினியுடன் இருக்கும் இந்தக் குழந்தை யார் தெரியுமா?" "இளசுகளின் வைப் மெட்டீரியல் இவர் தான்!"

2011ம் ஆண்டு தனுஷ் நடித்த "3" திரைப்படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமானவர் அனிருத் ரவிச்சந்தர். தொடர்ந்து எதிர்நீச்சல், வணக்கம் சென்னை, இரண்டாம் உலகம், வேலையில்லா பட்டதாரி, மான் கராத்தே, கத்தி உள்ளிட்ட பல படங்களுக்கு இசையமைத்துள்ளார்.
3 படத்தில் இவர் இசையில் வெளியான "வொய் திஸ் கொலவெறி டி?" பாடல் மூலம் பட்டி தொட்டியெங்கும் பிரபலமானார் அனிருத். தொடர்ந்து ஆரம்பத்தில் சிவகார்த்திகேயன் மற்றும் தனுஷ் படங்களுக்கு மட்டுமே இசையமைத்து வந்தார் அனிருத்.
இதையடுத்து தற்போது விஜய், ரஜினி, கமல், அஜித் என்று தமிழின் அனைத்து முன்னணி நடிகர்களின் படங்களுக்கும் இசையமைத்து வருகிறார். தற்போதுள்ள தமிழ் இளசுகளின் வைப் மெட்டீரியலாக இருக்கும் அனிருத், தற்போது நிறைய படங்களில் கமிட்டாகியிருக்கிறார்.
இந்நிலையில், தனது 10 வயதில் இருந்தே இசைத் துறையில் சாதித்து வரும் அனிருத்துக்கு லட்சக்கணக்கில் ரசிகர்கள் உள்ளனர். இந்நிலையில் இவரது குழந்தைப் பருவப் புகைப்படங்கள் தற்போது சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகின்றன.