ஆசையாக அழைத்து பேன்டீன் ஷாம்பு கொடுத்த வைரமுத்து - புயலை கிளப்பிய பாடகி சுசித்ரா.!
ஆண்ட்ரியாவோட பிரேக்கப் ஆனாதுக்கு இது தான் காரணம்... உண்மையை போட்டுடைத்த அனிருத்... வைரலாகும் வீடியோ!!
தனுஷ் நடிப்பில் வெளியான 3 திரைப்படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமானவர் அனிருத். அதனை தொடர்ந்து ரஜினி, கமல், அஜித், விஜய் உள்ளிட்ட பல முன்னணி பிரபலங்களின் ஏராளமான படங்களில் எக்கச்சக்கமான பாடல்களை பாடியுள்ளார். தனது அசத்தலான இசையால் இளைஞர்களை கவர்ந்த அனிருத் தற்போது முன்னணி இசையமைப்பாளராக வலம் வருகிறார்.
சமீபத்தில் அனிருத் இசையமைப்பில் பீஸ்ட், காத்துவாக்குல ரெண்டு காதல், டான், விக்ரம் என வரிசையாக 4 முன்னணி நடிகர்களின் படங்கள் ரிலீசாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இந்நிலையில் அவ்வப்போது சர்ச்சையில் சிக்கி வருகிறார் அனிருத்.
அந்த வகையில் அனிருத் இசையமைப்பாளராக அறிமுகமான காலகட்டத்தில் இவரும், ஆண்ட்ரியாவும் காதலித்து வருகின்றனர் என்றும் இவர்கள் இருவரும் நெருக்கமாக இருக்கும் புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் செய்திகள் பரவியது.
இந்நிலையில் அனிருத்தின் பழைய பேட்டி வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது. அதில் அனிருத்திடம் அவரது காதல் தோல்வி குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த அவர், நான் காதலித்த பெண் என்னுடன் 6 வயது பெரிய பெண்ணாக இருந்ததால், எங்களுக்குள் செட்டாகவில்லை என்று தெரிவித்தார்.
#Anirudh About Breakup With #Andrea pic.twitter.com/rOCvqqAgoO
— chettyrajubhai (@chettyrajubhai) June 22, 2022