ஜெயலலிதாவுடன் இருக்கும் இந்த விஜய் டிவி பிரபலம் யார்னு தெரியுதா? மாஸ்டர் படத்தில் நடித்திருக்கிறாரே!!

ஜெயலலிதாவுடன் இருக்கும் இந்த விஜய் டிவி பிரபலம் யார்னு தெரியுதா? மாஸ்டர் படத்தில் நடித்திருக்கிறாரே!!


anger-ramya-with-jayalalitha-photo-viral

விஜய் தொலைக்காட்சியில் தொகுப்பாளினியாக இருந்து ரசிகர்கள் மத்தியில் பெருமளவில் பிரபலமானவர்கள் ஏராளம். அவ்வாறு விஜய் டிவியில் ஏராளமான நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கியதன் மூலம் ரசிகர்கள் மத்தியில் நீங்கா இடம் பிடித்தவர் தொகுப்பாளினி ரம்யா. இவர் டிவி நிகழ்ச்சிகள் மட்டுமின்றி சினிமா கலை நிகழ்ச்சிகள், இசை வெளியீட்டு விழாக்கள், விருது வழங்கும் விழாக்கள் என ஏராளமான நிகழ்ச்சிகளில் சிறந்த தொகுப்பாளராக பணியாற்றியுள்ளார்.

அதனை தொடர்ந்து சினிமா பக்கம் ஆர்வம் காட்டத் தொடங்கிய அவர் ஜோதிகா நடிப்பில் வெளிவந்த மொழி திரைப்படத்தில் சிறு கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். பின்னர் ஓகே கண்மணி, மாஸ் என்கிற மாசிலாமணி மற்றும் ஆடை என பல படங்களில் துணை கதாபாத்திரங்களில் நடித்திருந்தார். அதுமட்டுமின்றி சமீபத்தில் விஜய் நடிப்பில் வெளிவந்து மாபெரும் ஹிட்டடித்த மாஸ்டர் திரைப்படத்திலும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். மேலும் ரம்யா சங்கத்தலைவன் என்ற திரைப்படத்திலும் நடித்துள்ளார்.

jayalalitha

இந்நிலையில் நடிகை ரம்யா சிறுவயதில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுடன் எடுத்துக் கொண்ட புகைப்படம் ஒன்று இணையத்தில் வைரலாக பரவி வருகிறது. ரம்யாவின் தந்தை தமிழ்நாட்டின் முன்னாள் அட்வகேட் ஜெனரல் ஆவார்.  அவர் ஓய்வு பெறும் நிலையில் ஜெயலலிதா, உங்களது குடும்பத்தை அழைத்து வாருங்கள் என கேட்டதை தொடர்ந்து, அவர் அனைவரையும் அழைத்து சென்றுள்ளார். அங்கு ரம்யாவை மடியில் அமர்த்தி ஜெயலலிதா காபி கொடுத்ததாக முன்பு பேட்டி ஒன்றில் ரம்யா தெரிவித்துள்ளார். இந்த புகைப்படங்கள் தற்போது வைரலாகி வருகிறது.