
விஜய் தொலைக்காட்சியில் ஏராளமான நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி பாவனா, ரம்யா, டிடி, ஜாக்குலின்
விஜய் தொலைக்காட்சியில் ஏராளமான நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி பாவனா, ரம்யா, டிடி, ஜாக்குலின், பிரியங்கா என ரசிகர்கள் மனதில் நீங்காத இடத்தைப் பிடித்த தொகுப்பாளினிகள் ஏராளம். இவ்வாறு விஜய் டிவியில் பல நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கியதன் மூலம் ரசிகர்கள் மத்தியில் பெருமளவில் புகழ்பெற்றவர் தொகுப்பாளினி ரம்யா. இவர் டிவி நிகழ்ச்சிகள் மட்டுமின்றி விருது வழங்கும் விழாக்கள், இசை வெளியீட்டு விழாக்கள், சினிமா, கலை நிகழ்ச்சிகள் போன்றவற்றிலும் தொகுப்பாளராக பணியாற்றியுள்ளார்.
அதனை தொடர்ந்து அவர் 2007ஆம் ஆண்டு ஜோதிகா நடிப்பில் வெளிவந்த மொழி திரைப்படத்தில் துணை கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். பின்னர் ஓ காதல் கண்மணி, மாஸ் என்கிற மாசிலாமணி, ஆடை போன்ற பல படங்களிலும் அதனைத் தொடந்து சமீபத்தில் விஜய் நடிப்பில் வெளிவந்த மாஸ்டர் திரைப்படத்திலும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.
இந்த நிலையில் ரம்யா கிராமத்து பெண் போல இருக்கும் புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ளார். மேலும் அதில் தான் நடிக்க தொடங்கிய முதல் படம் சங்க தலைவன். அப்படம் விரைவில் ரிலீசாக உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
Advertisement
Advertisement