கால்ல விழுடா.. கேப்டன் மில்லர் பட விழாவில் தனுஷ் ரசிகரை ஓட ஓட தாக்கிய தொகுப்பாளினி.! என்ன நடந்தது? வைரல் வீடியோ!!Anger aishwarya slap dhanush fan for misbehaving with her

கேப்டன் மில்லர் இசை வெளியீட்டு விழாவில் தன்னிடம் தவறான முறையில் நடந்துகொண்ட தனுஷ் ரசிகரை தொகுப்பாளினி ஐஸ்வர்யா தாக்கி ஓடவிட்ட சம்பவம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

இயக்குனர் அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் கேப்டன் மில்லர். இப்படத்தில் பிரியங்கா மோகன், சிவராஜ்குமார், சுந்திப் கிஷன் உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். ஜி.வி பிரகாஷ் இந்த படத்திற்கு  இசையமைத்துள்ளார். இந்தப் படத்தில் நிகழ்ச்சி தொகுப்பாளினியான ஐஸ்வர்யாவும் சிறு ரோலில் நடித்துள்ளாராம்.

இந்நிலையில் கேப்டன் மில்லர் படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் தொகுப்பாளினி ஐஸ்வர்யாவும் கலந்து கொண்டுள்ளார். நிகழ்ச்சி முடிந்ததும் நடிகர் தனுஷை பார்க்க ரசிகர்கள் கும்பலாக கூடியுள்ளனர். அப்பொழுது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் அங்கு அமர்ந்திருந்த ஐஸ்வர்யாவிடம் நபர் ஒருவர் பாலியல் சீண்டலில் ஈடுபட்டுள்ளார். இந்நிலையில் ஆத்திரமடைந்த ஐஸ்வர்யா அந்த நபரை பிடித்து தர்ம அடி கொடுத்துள்ளார்.

மேலும் தனது காலில் விழ வைத்து, செருப்பால அடிப்பேன் என கூறி ஓட ஓட அடித்துள்ளார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. கடந்த சில மாதங்களுக்கு  முன் தொகுப்பாளினி ஐஸ்வர்யா சரக்கு பட இசை வெளியீட்டு விழாவை தொகுத்து வழங்கியபோது, கூல் சுரேஷ் வலுக்கட்டாயமாக அவருக்கு மாலை போட்டார். அது பெரும் சர்ச்சையாக வெடித்தது. பின்னர் அதற்கு பலரும் கண்டனம் தெரிவித்த நிலையில் கூல் சுரேஷ் மன்னிப்பு கேட்டிருந்தார்.