எல்.ஐ.சி திரைப்படத்திற்கு வந்த புதிய சோதனை.! தொடக்கத்திலேயே ஆப்பு வைத்த இயக்குனர்.!

எல்.ஐ.சி திரைப்படத்திற்கு வந்த புதிய சோதனை.! தொடக்கத்திலேயே ஆப்பு வைத்த இயக்குனர்.!



AnewtestforLICfilmThedirectorwho putthewedgeinthebeginning

இயக்குனர் விக்னேஷ் சிவன் பிரதீப் ரங்க நாதனை வைத்து ஒரு திரைப்படத்தை இயக்க உள்ளார் இந்த திரைப்படத்தின் கதாநாயகியாக கீர்த்தி செட்டி நடிக்கவுள்ளார். அதோடு இந்த திரைப்படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிகரும் இயக்குனருமான எஸ் ஜே சூர்யா நடிக்க உள்ளார் என்று சொல்லப்படுகிறது. இந்த திரைப்படத்தின் படபிடிப்பு சென்னையில் பூஜையுடன் ஆரம்பமானது இந்த திரைப்படத்திற்கு எல்.ஐ.சி என்று பெயர் வைக்கப்பட்டிருக்கிறது. இந்த திரைப்படத்திற்கு ஆரம்பத்திலேயே சிக்கல் வந்திருக்கிறது இந்த திரைப்படத்தின் தலைப்பு என்னுடையது என்று இயக்குனர் எஸ் எஸ் குமரன் கூறியிருக்கிறார்.

Bradeepranganathan

இந்த விவகாரம் குறித்து இயக்குனர் எஸ். எஸ். குமரன் வெளியிட்டுள்ள அறிக்கையில், விக்னேஷ் சிவன் இயக்கும் புதிய படத்திற்கு எல்ஐசி (L I C) என்று பெயரிட்டு இருப்பதைக்கண்டு அதிர்ச்சியும், மன உளைச்சலும் அடைந்தேன். காரணம் LIC என்கிற பெயரை 2015ம் ஆண்டே என் தயாரிப்பு நிறுவனமான சுமா பிக்சர்ஸ் வாயிலாக பதிவு செய்து வைத்திருக்கிறேன்.இதை அறிந்த விக்னேஷ் சிவன் தன்னுடைய புதிய படத்திற்கு அந்தபெயரை தரக்கோரி தனது மேலாளர் மயில்வாகனன் மூலம் என்னை அணுகினார்.

Bradeepranganathan

ஆனால் நான் இயக்கும் படத்திற்கு மிகச்சரியாக பொருந்துவதாலும், கதையின் பலமே அந்த தலைப்பை ஒட்டி அமைந்திருப்பதாலும் நான் மறுத்துவிட்டேன். இந்த தலைப்பு என்னிடம் உள்ளதால், அதை விக்னேஷ் சிவன் பயன்படுத்த கூடாது. மீறினால் சட்டப்படி அவர் மீது நடவடிக்கை எடுப்பேன்'' என்கிறார் இயக்குனர் எஸ்.எஸ். குமரன்.