"ஓ சொல்றியா மாமா..." மலேசியாவில் கலை கட்டிய ஆண்ட்ரியாவின் நிகழ்ச்சி... அசத்தல் நடன வீடியோ!

"ஓ சொல்றியா மாமா..." மலேசியாவில் கலை கட்டிய ஆண்ட்ரியாவின் நிகழ்ச்சி... அசத்தல் நடன வீடியோ!


andrea-live-show-oh-sollriya-mama-hits-malaysian-capita

ஆண்ட்ரியா ஜெர்மியா தமிழ் சினிமாவின் முன்னணி நாயகிகளில் ஒருவராக திகழ்பவர். 2007 ஆம் ஆண்டு கௌதம் மேனன் இயக்கத்தில் வெளியான  பச்சைக்கிளி முத்துச்சரம் என்ற திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர். 2013 ஆம் ஆண்டு  பகத்வாசலுக்கு ஜோடியாக அணாவும் ரசூலும்  என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமானவர்.

இவர் நடிகையாக மட்டுமல்லாமல்  பின்னணி பாடகியாகவும்  மாடலாகவும் பணியாற்றி வருபவர். வடசென்னை திரைப்படத்தில் இவர் நடித்த கதாபாத்திரம் இவருக்கு அங்கீகாரத்தை பெற்றுக் கொடுத்தது. மேலும் தரமணி திரைப்படத்தில் இவர் நடித்திருந்த கதாபாத்திரத்தை ரசிகர்கள் மிகவும் வியந்து பாராட்டினர்.

Andrea

இசைக் கலைஞராகவும் பாடகியாகவும் விளங்கிவரும் ஆண்ட்ரியா  தனது கலை நிகழ்ச்சிகளை மலேசியாவில் நடத்தி வருகிறார். ஓ சொல்றியா மாமா என்ற பெயரில் நடத்தப்படும் இந்த கலை நிகழ்ச்சிகள் மலேசிய தலைநகர் கோலாலம்பூரில் நடைபெற்று வருகின்றன.

அந்தக் கலை நிகழ்ச்சிகளின் அறிமுக வீடியோவை தனது சமூக வலைதள பக்கமான இன்ஸ்டாகிராமில் பகிர்ந்திருக்கிறார்  ஆண்ட்ரியா. அந்த வீடியோ ரசிகர்களிடம்  வைரலாகி இருக்கிறது. இந்த நிகழ்ச்சியை காண ஏராளமான ரசிகர்கள் குவிந்திருந்தனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.