ஆசையாக அழைத்து பேன்டீன் ஷாம்பு கொடுத்த வைரமுத்து - புயலை கிளப்பிய பாடகி சுசித்ரா.!
கலர் கலர் உடையில் கலக்கலாக இருக்கும் ஆண்ட்ரியா.. இணையத்தில் தீயாய் பரவும் புகைப்படம்.?
கோலிவுட் திரையுலகில் முன்னணி நடிகையாக இருப்பவர் ஆண்ட்ரியா. இவர் இசை, நடிப்பு, பாடல் என பல திறமைகளை கொண்டுள்ளார். இவர் 'பச்சைக்கிளி முத்துச்சரம்' திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் காலடியெடுத்து வைத்தார்.
ஆண்ட்ரியா ஆயிரத்தில் ஒருவன், மங்காத்தா, சகுனி, விஸ்வரூபம், அரண்மனை, ஆம்பள, உத்தம வில்லன், தரமணி, துப்பறிவாளன், விஸ்வரூபம், வடசென்னை, அரண்மனை 3 போன்ற படங்களில் முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்து மக்கள் மனதில் இடம் பிடித்துள்ளார்.
ஆண்ட்ரியா கதாபாத்திரங்களுக்கு முக்கியத்துவம் தரும் கதைகளை தேர்ந்தெடுத்து நடிப்பில் வல்லவர். தனது நடிப்பு திறமையின் மூலமும், அழகின் மூலமும் தனக்கென தனி ரசிகர் கூட்டத்தை பிடித்திருக்கிறார்.
இந்த நிலையில், சமூக வலைத்தளங்களில் ஆண்ட்ரியா அடிக்கடி தனது புகைப்படங்களை பதிவிட்டு வருவார். சமீபத்தில் இசை கச்சேரியில் கலந்து கொண்ட போது எடுத்த புகைப்படங்களை தனது இனஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டு இருக்கிறார் ஆண்ட்ரியா. இப் புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் தீயாய் பரவி வருகிறது.