
Andiriya
தமிழில் கண்ட நாள் முதல் என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமானவர் நடிகை ஆன்ட்ரியா. அதனை தொடர்ந்து பல படங்களில் நடித்துள்ளார். இவர் நடிகர் கார்த்தியுடன் இணைந்து நடித்து வெளியான ஆயிரத்தில் ஒருவன் திரைத்தின் மூலம் தான் பிரபலமானார்.
இவர் நடிகை என்பதை தாண்டி சிறந்த பாடகியாகவும் விளங்குகிறார். இந்நிலையில் சமீபத்தில் தனுஷ் நடிப்பில் வெளியான வடசென்னை படத்தில் நடிகை ஆன்ட்ரியா படுக்கையறை காட்சியில் மிகவும் நெருக்கமாக நடித்திருந்தார்.
தற்போது அந்த படத்தில் நான் அப்படி நடித்தது தான் தப்பா போச்சு என புலம்பி வருகிறார். காரணம் தற்போது அவருக்கு அப்படிப்பட்ட காட்சியில் நடிக்க மட்டுமே வாய்ப்புகள் வருவதாக மனவேதனையுடன் கூறியுள்ளார்.
மேலும் நல்ல கதை, கதாபாத்திரம் ஆகியவை அமைந்தால் சம்பளத்தை குறைத்துக் கொண்டு நடித்து தருவதாகவும் தெரிவித்துள்ளார்.
Advertisement
Advertisement