யாரு இதை செய்தது?.. மகள் சாராவை சர்ப்ரைஸால் கண்கலங்க வைத்த விஜே அர்ச்சனா..! தளபதின்னா அவ்ளோ புடிக்கும்போலயே..!!

யாரு இதை செய்தது?.. மகள் சாராவை சர்ப்ரைஸால் கண்கலங்க வைத்த விஜே அர்ச்சனா..! தளபதின்னா அவ்ளோ புடிக்கும்போலயே..!!


Anchor archana daughter Sara cry

தனியார் தொலைக்காட்சியில் தொகுப்பாளினியாக பணியாற்றி வரும் விஜே அர்ஜானா கடந்த 23 ஆண்டுகளுக்கு மேலாக தொகுப்பாளராக சிறந்த பணியாற்றி வருகிறார். ஆங்கில செய்தியாளராக தனது வாழ்க்கையை ஆரம்பித்த அர்ச்சனா பின் நாட்களில் பல நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி மக்களிடையே பிரபலமானார்.

Anchor archana

கடந்த 2004-ஆம் ஆண்டு இவர் வினித் என்பவரை திருமணம் செய்து கொண்ட நிலையில், தம்பதிகளுக்கு சாரா என்ற பெண் குழந்தை பிறந்தது. சாரா வளர்ந்த பின்னர் அம்மாவும், மகளுமாக இருவரும் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி youtube சேனலையும் நடத்தி வருகின்றனர்.

Anchor archana

தற்போது படத்தில் நடிக்கும் அளவு வந்துவிட்ட நிலையில், இவர் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பின்னர் எதிர்மறையான கருத்துக்கள் உலா வருகின்றன. தனது கணவருடனான விவாகரத்து தொடர்பாகவும் அவர் பேசியிருந்தார். 

இந்த நிலையில் இவரின் மகளுக்கு நடிகர் விஜய் என்றால் கொள்ளை பிரியம். அதற்காக அர்ச்சனா தனது மகளுக்கு அழகிய பரிசை அளித்துள்ளார். அதில் தளபதி விஜய்யின் மாஸ்டர் பட சிலை இருந்தது. இதனைக்கண்ட சாரா மகிழ்ச்சியுடன் சிலையை பார்த்து அழும் வீடியோ இணையத்தில் வைரலாகியுள்ளது.