மறைந்த தொகுப்பாளர் ஆனந்த கண்ணன் கடைசியாக வைத்திருந்த வாட்ஸ் அப் DP.!

மறைந்த தொகுப்பாளர் ஆனந்த கண்ணன் கடைசியாக வைத்திருந்த வாட்ஸ் அப் DP.!



anantha-kannan-last-whats-app-dp

பிரபல தொகுப்பாளரான ஆனந்த கண்ணன் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்று இரவு காலமானார்.

சன் மியூசிக் சேனல் தொடங்கப்பட்ட காலத்தில் மிகவும் பிரபலமான தொகுப்பாளராக இருந்தவர் விஜே ஆனந்த கண்ணன். வெளிநாடுகளில் நடக்கும் கலை நிகழ்ச்சிகளுக்கும் தொகுப்பாளராக இருந்த இவர் 90ஸ் கிட்களின் பேவரைட் விஜேவாக இருந்தவர்.

சித்துபாத் உள்ளிட்ட சீரீயலில் நடித்த ஆனந்த கண்ணன் சில திரைப்படங்களிலும் நடித்து உள்ளார். ஆனந்த கண்ணன் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்று இரவு சிகிச்சை பலனின்றி மருத்துவமனையில் உயிரிழந்தார். விஜே ஆனந்த கண்ணன் மறைவு அவரது ரசிகர்களை பெரும் அதிர்ச்சியடையவைத்துள்ளது.

ananthakannan

பிரபல தொகுப்பாளரான ஆனந்த கண்ணன் இறப்பதற்கு முன் கடைசியாக தனது மனைவியுடன் எடுத்த அழகிய புகைப்படத்தை தான் வாட்ஸ் அப் DPயாக வைத்துள்ளார். பலரும் அந்த புகைப்படத்தை பகிர்ந்து வருகின்றனர்.