பல கோடி ரூபாய் சொத்துக்களை அபகரிக்க முயற்சி... கமிஷனர் ஆபீஸில் கௌதமி பரபரப்பு புகார்.!an-attempt-to-expropriate-several-crores-of-property-ga

தமிழ் சினிமாவில் பிரபல நடிகையாக இருந்தவர் கௌதமி. இவர் குருதிப்புனல், தேவர் மகன் உட்பட பல வெற்றி படங்களில் கதாநாயகியாக நடித்தவர். 90-களில் தமிழ் சினிமாவில் முன்னணி கதாநாயகியாக வலம் வந்தவர்.

சில ஆண்டுகளுக்கு முன்பு வெளியான கமல்ஹாசனின் பாபநாசம் திரைப்படத்திலும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். கமல்ஹாசன் உடன் சேர்ந்து வாழ்ந்து வந்த இவ்வாறு சில காலமாக அவரை பிரிந்து தனது மகளுடன் வசித்து வருகிறார்.

Kollywoodஇந்நிலையில் 25 கோடி ரூபாய் மதிப்புள்ள அவரது சொத்துக்களை மோசடி செய்து அபகரிக்க இருப்பதாக சென்னை காவல்துறை ஆணையர் அலுவலகத்தில் பரபரப்பான புகார் ஒன்றை பதிவு செய்திருக்கிறார் கௌதமி. அந்தப் புகாரில் தனது அசையா சொத்துக்களை பராமரிக்க முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளதாகவும்  அதனைப் பயன்படுத்தி அழகப்பன் மற்றும் அவரது குடும்பத்தினர் தன்னுடைய சொத்துக்களை மோசடி செய்து அபகரிக்க முயற்சி செய்வதாக தெரிவித்துள்ளார்.

Kollywoodமேலும் 2004 ஆம் ஆண்டு தனக்கு புற்றுநோய் பாதிப்பு ஏற்பட்டிருந்தபோது  ஸ்ரீபெரும்புதூரில் உள்ள சொத்துக்களை விற்பதற்கு அழகப்பன் தனக்கு உதவி செய்ததாகவும் மேலும் அவர் மீது தனக்கு இருந்த நம்பிக்கையை பயன்படுத்தி அனைத்து சொத்துக்களுக்கும் பவர் ஏஜெண்டாக பெயரை மாற்றிக் கொண்டு தற்போது 25 கோடி மதிப்புள்ள சொத்துக்களை அபகரிக்க முயற்சி செய்வதாகவும் அந்த புகாரில் தெரிவித்துள்ளார்.