அமுதவானனுடன் இணைந்து ரஞ்சிதமே பாடலை ஜிபி முத்து எவ்வாறு பாடியுள்ளார் என்று பாருங்கள்... வைரலாகும் இன்ஸ்டா வீடியோ!!

அமுதவானனுடன் இணைந்து ரஞ்சிதமே பாடலை ஜிபி முத்து எவ்வாறு பாடியுள்ளார் என்று பாருங்கள்... வைரலாகும் இன்ஸ்டா வீடியோ!!Amuthavana teach ranjithame song for gp muthu

பிரபல தொலைக்காட்சியான விஜய் டிவியில் மக்கள் விரும்பி பார்க்கும் ஷோவில் ஒன்று தான் பிக்பாஸ் நிகழ்ச்சி. இந்த நிகழ்ச்சி தொடங்கி வெற்றிகரமாக 6 சீசன்களை கடந்துள்ளது. சமீபத்தில் நிறைவடைந்த பிக்பாஸ் சீசன் 6 யில் போட்டியாளர்களாக கலந்து கொண்டவர்களுள் அமுதவானன் மற்றும் ஜிபி முத்து அடங்குவர். அதில் அமுதவானன் கடைசி வரை சென்று பின்னர் பண பெட்டியை எடுத்து கொண்டு வீட்டை விட்டு வெளியேறினார்.

ஜிபி முத்து நிகழ்ச்சி தொடங்கிய இரண்டு வாரத்திலேயே மகனின் நினைவால் வீட்டை விட்டு வெளியேறினார். இந்நிலையில் தற்போது பிக்பாஸ் கொண்டாட்டம் நடைபெற உள்ளது. அதற்கு பிக்பாஸ் சீசன் 6 போட்டியாளர்கள் அனைவரும் கலந்து கொள்ள உள்ளனர்.

இந்நிலையில் அந்த செட்டில் அமுதவானன் ஜிபி முத்துவிற்கு ரஞ்சிதமே பாடலை பாடுவதற்கு கற்றுக்கொடுத்துள்ளார். ஆரம்பத்தில் நன்றாக பாடிய ஜிபி முத்து கடைசி வரியில் அமுதவானனை அந்த பாடல் ராகத்திற்குள் கொண்டு வந்து தானாக ஒரு வரியை பாடி அசிங்கப்படுத்தியுள்ளார். தற்போது அந்த வீடியோ காட்சியை அமுதவானன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.