சினிமா

சேலை காற்றில் பறக்க, ராட்சசன் பட நடிகை கொடுத்துள்ள போஸை பார்த்தீர்களா! வைரலாகும் புகைப்படங்கள்!

Summary:

Ammu abirami latest photo viral

தமிழ் சினிமாவில் என் ஆளோட செருப்ப காணோம் என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார் நடிகை அம்மு அபிராமி. அந்த படத்தை தொடர்ந்து அவர் கார்த்தி நடிப்பில் வெளிவந்த தீரன் அதிகாரம் ஒன்று என்ற திரைப்படத்தில் நடிகர் கார்த்திக்கு தங்கையாக  நடித்திருந்தார்.

மேலும் அம்மு அபிராமி ராட்சசன் படத்தில் பள்ளி பெண்ணாக நடித்ததன் மூலம் பெருமளவில் ரசிகர்களிடையே பிரபலமானார். அதனை தொடர்ந்து அவர் துப்பாக்கி முனை, அசூரன், யார் இவர்கள், தம்பி ஆகிய திரைப்படங்களில் நடித்துள்ளார்

மேலும்  தனுஷுடன் இணைந்து அசூரன் திரைப்படத்தில் அவர் சிறப்பாக நடித்திருந்தார். அது ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று பாராட்டை வாங்கி தந்தது. இந்த நிலையில் சமூக வலைத்தளங்களில் பிசியாக இருக்கும் அம்மு அபிராமி அவ்வப்போது தனது புகைப்படங்களை வெளியிடுவதை வழக்கமாக கொண்டுள்ளார்.அவ்வாறு தற்போதும் சேலையில் அழகிய போஸ் கொடுத்த புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.அதனை கண்ட ரசிகர்கள் அவரை வர்ணித்து வருகின்றனர்.


Advertisement