BREAKING: மீண்டும் மீண்டுமா.... ஜனநாயகன் பட வழக்கில் உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு..!!
"சூர்யா எனக்கு ஒரு நல்ல நண்பர்! நல்ல சகோதரர்!" இயக்குனர் அமீர் பேட்டி!
தமிழ்த் திரைப்பட இயக்குனர், நடிகர் மற்றும் தயாரிப்பாளராக இருப்பவர் அமீர். இவர் பாலாவிடம் உதவி இயக்குனராக பணிபுரிந்தவர். இதையடுத்து 2002ம் ஆண்டு சூர்யா மற்றும் திரிஷாவை வைத்து "மௌனம் பேசியதே" என்ற திரைப்படத்தை இயக்கி, இயக்குனராக அறிமுகமானார்.

தொடர்ந்து ராம், பருத்திவீரன், ஆதிபகவன் உள்ளிட்ட படங்களை இயக்கியுள்ளார். இந்நிலையில் பருத்திவீரன் படம் குறித்து சர்ச்சை கடந்த சில நாட்களாக பேசப்பட்டு வருகிறது. தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா அமீர் மீது கடுமையான குற்றச்சாட்டை முன்வைத்த நிலையில், தற்போது மன்னிப்பு கேட்டுள்ளார்.
இந்நிலையில், தற்போது மௌனம் பேசியதே பட சமயத்தில் இருந்தே அமீருக்கும், சூர்யாவுக்கும் பிரச்சனை உள்ளது என்ற தகவல் தற்போது வெளியாகியுள்ளது. இதுகுறித்து அமீரிடம் கேட்டபோது, "எனக்கும், சூர்யாவுக்கும் இடையே எந்தப் பிரச்சனையும் இல்லை.

அவருடன் நான் வெற்றிமாறனின் "வாடிவாசல்" படத்தில் நடிக்கவுள்ளேன். வெற்றிமாறனுக்கு ஒரு ஆண்டுக்கு முன்பே என்னிடம் இந்தக் கதையை கூறி, சூர்யாவுடன் நடிப்பதில் ஏதும் பிரச்சனையா? என்று கேட்டார். ஆனால் சூர்யா எனக்கு ஒரு நல்ல நண்பர். நல்ல சகோதரர்" என்று அமீர் கூறியுள்ளார்.