
amit bargav like girl baby after seeing viswasam movie
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான கல்யாணம் முதல் காதல் வரை என்ற தொடர் மூலம் விஜய் டிவி ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் நடிகை அமித். இந்த தொடர் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றதால் நடிகர் அமித்தும் விஜய் டீவியில் முக்கிய நடிகராக கருதப்பட்டார்.
அதனை தொடர்ந்து அவர் நெஞ்சம் மறப்பதில்லை என்ற தொடரில் நடித்து ரசிகர்கள் மத்தியில் நீங்கா இடம்பிடித்தார். அமித் மனைவி தொகுப்பாளினி ஸ்ரீ ரஞ்சனி. இவர்களுக்கு கடந்த சில மாதங்களுக்கு முன்பு கடந்த மே 7ம் தேதி அக்ஷய திருதியை அன்று பெண் குழந்தை பிறந்தது.
இந்நிலையில் அவர் சமீபத்தில் பேட்டி ஒன்றில் தனக்கு பெண்குழந்தை பிறந்ததால் தான் மிகவும் மகிழ்ச்சி அடைந்ததாக கூறியுள்ளார். மேலும் அவர் தான் விஸ்வாசம் படம் பார்த்தபோது தந்தை மற்றும் மகளுக்கு இடையேயுள்ள அன்பை பார்த்து தனக்கு பெண்குழந்தைதான் பிறக்கவேண்டும் என ஆசைப்பட்டதாக கூறியுள்ளார்.
Advertisement
Advertisement