தமிழகம்

அமெரிக்காவில் கிறிஸ்துமஸ் கொண்டாடிய விஜயகாந்த்; வைரலாகும் புகைப்படம்.!

Summary:

america captan vijayakanth christmax festival

தனது மனைவி மற்றும் நண்பர்களுடன் அமெரிக்காவில் உற்சாகமாக கிறிஸ்துமஸ் கொண்டாடியுள்ளார் தேமுதிக தலைவர் விஜயகாந்த்.

திரையில் தனது அனல் தெறிக்கும் வசனங்கள் அதிரடி சண்டை காட்சிகள் மூலம் மக்கள் செல்வாக்கை பெற்றவர் கேப்டன் விஜயகாந்த். அதன் மூலம் அரசியலில் தடம் பதித்து எதிர்க்கட்சியை தலைவர் அந்தஸ்தை பெற்றவர்.

சிறப்பான தனது அரசியல் பயணத்தில் அவரது உடல்நிலை ஒத்துழைப்பு கொடுக்க மறுத்தது. அதன் காரணமாக தற்போது அடிக்கடி மருத்துவமனைக்கு சென்று சிகிச்சை பெற்று வருகிறார். இந்நிலையில் முதற்கட்ட சிகிச்சை முடித்து இரண்டாம் கட்ட சிகிச்சைக்காக அமெரிக்கா சென்றுள்ளார் கேப்டன்.

அங்கு தனது நண்பர்கள் இல்லத்தில் தனது மனைவி மற்றும் நண்பர்களுடன் உற்சாகமாக கிறிஸ்துமஸ் பண்டிகையை கொண்டாடினார். அந்த புகைப்படத்தை தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். இதனால் அவரது தொண்டர்கள் அவர் விரைவில் நலம் பெற்று நாடு திரும்புவார் என்று ஆவலுடன் உள்ளனர்.
 


Advertisement