அம்மாடியோவ்.. இவ்வளவா?? புஷ்பா படத்தை அமேசான் பிரைம் எவ்வளவு கொடுத்து வாங்கியுள்ளது பார்த்தீங்களா!!

அம்மாடியோவ்.. இவ்வளவா?? புஷ்பா படத்தை அமேசான் பிரைம் எவ்வளவு கொடுத்து வாங்கியுள்ளது பார்த்தீங்களா!!


Amazon prime pay huge amount for pushpa movie

நடிகர் அல்லு அர்ஜுனின் மிரட்டலான நடிப்பில் வெளிவந்து ரசிகர்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பை பெற்று தற்போது திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் திரைப்படம் புஷ்பா. இந்தப் படம் செம்மர கடத்தலை மையமாக கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது.  இந்த படத்தை சுகுமார் இயக்கியுள்ளார்.

மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம்  தயாரித்த இந்த படத்தில் ராஷ்மிகா மந்தனா ஹீரோயினாக நடித்துள்ளார். மேலும் பகத் பாசில் வில்லனாக நடித்துள்ளார். சமந்தா  புஷ்பா படத்தில் 'ஊ சொல்றியா மாமா' என்ற பாடலுக்கு கவர்ச்சி ஆட்டம் போட்டுள்ளார். தமிழ், மலையாளம், ஹிந்தி மற்றும் கன்னட மொழிகளில் உருவான இந்தப் படம் டிசம்பர் 17 அன்று திரையரங்குகளில் வெளியாகி 300 கோடிக்கு மேல் வசூல் சாதனை படைத்தது.

Pushpa

இந்நிலையில் புஷ்பா படம் ஜனவரி 7ம் தேதி இன்று இரவு 8 மணிக்கு அமேசான் பிரைம் ஒடிடியில் வெளியாகவுள்ளது. தியேட்டரையே தெறிக்கவிட்டு, ஹிட்டாகி வரும் இந்த திரைப்படத்தை அமேசான் ப்ரைம் ஓடிடி நிறுவனம் ரூபாய் 30 கோடி கொடுத்து வாங்கி இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது