சினிமா

அடையாளம் தெரியாமல் மாறிய அமலாபால்! வெளிநாட்டு தோழியுடன் அவர் இருக்கும் புகைப்படத்தை பாருங்கள்.

Summary:

Amala paul Halloween photos goes viral

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவராக இருப்பவர் நடிகை அமலாபால். சிந்துசமவெளி திரைப்படம் மூலம் தமிழ் சினிமவில் ஹீரோயின் அவதாரம் எடுத்த அமலாபால் விஜய், விக்ரம், ஆர்யா என தமிழ் சினிமாவின் பிரபல நடிகர்ளுடன் ஜோடி சேர்ந்து நடித்துவிட்டார்.

இந்நிலையில் பிரபல இயக்குனர் AL விஜய்யுடன் காதல் திருமணம் செய்துகொண்ட இவர் பின்னர் கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் விவாகரத்து பெற்றார். தற்போது அடுத்தடுத்த படங்களில் பிசியாக நடித்துவரும் அமலாபால் சமீபத்தில் ஆடை படத்தில் ஆடை இல்லாமல் நடித்து பல்வேறு சர்ச்சைகளை சந்தித்தார்.

மேலும், தனது சமூக வலைதள பக்கத்தில் அவ்வப்போது வித்தியாசமான போஸ் கொடுத்து புகைப்படங்களை வெளியிட்டுவரும் அமலாபால் தற்போது தனது வெளிநாட்டு தோழி ஒருவருடன் ஹலோவின் வேடம் அணிந்து வித்தியாசமான புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார். இதோ அந்த புகைப்படம்.


Advertisement