சினிமா வீடியோ

கர்ப்பமாக இருக்கும்நேரத்தில் பெரும் ஆபத்தில் சிக்கித்தவித்த ஆல்யா! தக்க நேரத்தில் உதவிய பிரபலங்கள்! வைரலாகும் வீடியோ!

Summary:

alya manasa struggling in kothakiri drugging

பிரபல தொலைக்காட்சி சீரியலுக்கு இடையே கடுமையான போட்டி நிலவி வந்தாலும், விஜய் டிவி, ஜீ தமிழ், கலர்ஸ் என பல தொலைக்காட்சி பிரபலங்களும் ஒன்றாக இணைபிரியாத நண்பர்களாக இருந்து வருவது ரசிகர்களிடையே பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. 

அதாவது கலர்ஸ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிவரும் திருமணம் சீரியல் பிரபலங்கள் சித்து, ஷ்ரேயா அஞ்சன், விஜய் டிவி ராஜா ராணி பிரபலங்கள் சஞ்சீவ், ஆல்யா, ஸ்ரீதேவி ,பாண்டியன் ஸ்டோர்ஸ்  குமரன், `ஈரமான ரோஜாவே திரவியம், ரியோ, ஸ்ருதி, பிரிட்டோ, ஜீ தமிழ் சத்யா சீரியல் புகழ் விஷ்ணு, ஆய்ஷா இயக்குனர் பிரவீன் பென்னட் என அனைவரும் ஒரே கேங்காக கலக்கி வருகின்றனர்.

alya manasa new year celebrationக்கான பட முடிவுகள்

இந்நிலையில் கடந்த மாதம் புதுவருட கொண்டாட்டத்திற்காக அனைவரும் ஒன்றாக கோத்தகிரிக்கு டிரெக்கிங் சென்றுள்ளனர். அப்பொழுது அங்கு அனைவரும் மலை ஏற 7 மாதம் கர்ப்பமாக இருந்த ஆல்யாவால் மலை ஏற முடியவில்லை,  இந்நிலையில் ஆலியா பக்கத்தில் இருந்த ஒரு கோயிலில் தனது கணவர் சஞ்சீவுடன் இருந்துள்ளார். 

இந்நிலையில் அவர்களை அழைத்து வர ஜீப் ஒன்று அனுப்பப்பட்டுள்ளது. ஆனால் துரதிர்ஷ்டவசமாக அந்த ஜீப் பள்ளத்தில் சிக்கியது. மேலும் அது யானைகள் அதிகம் உலவும் பகுதி என்பதால் ஆலியா பயத்தில் நடுங்கிகொண்டு இருந்துள்ளார். அப்பொழுது இயக்குனர் பிரவீன் பென்னட் மற்றும் ஈரமான ரோஜாவே திரவியம் ஆகியோர் உடனே அவர்களது ஜீப்பில் அங்கு விரைந்து அவர்களை மீட்டுள்ளனர்.  அந்த வீடியோவை இயக்குனர் பிரவீன் பென்னட் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். 


Advertisement