"வீடியோவை டெலிட் பண்ணு.. காசு தரேன்." insta பிரபலத்திடம் நடிகை நயன்தாரா பேரம்.!
நீண்ட நாட்களுக்கு பிறகு தனது அப்பாவை வரவேற்க, அல்லு அர்ஜுன் மகள் செய்த காரியத்தை பார்த்தீர்களா..! நெகிழ்ந்துபோன அல்லு அர்ஜுன்.!!
நடிகர் அல்லு அர்ஜுனின் மிரட்டலான நடிப்பில் வெளிவந்து தமிழ், தெலுங்கு உள்ளிட்ட தென்னிந்தியாவில் மட்டுமல்லாமல் வட இந்தியாவிலும் மாபெரும் வரவேற்பை பெற்றது. செம்மர கடத்தலை மையமாக கொண்டு உருவான இப்படத்தை சுகுமார் இயக்கியுள்ளார். மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் இந்த படத்தை தயாரித்துள்ளது.
புஷ்பா படத்தில் ராஷ்மிகா மந்தனா ஹீரோயினாகவும், பகத் பாசில் வில்லனாகவும் நடித்துள்ளனர். மேலும் அப்படத்தில் இடம் பெற்றுள்ள ஊ சொல்றியா மாமா... பாடலுக்கு சமந்தா ஆடிய நடனம் வேற லெவல் ஹிட் ஆனது.
இந்நிலையில், அல்லு அர்ஜூன் துபாய் சென்றுவிட்டு வீடு திரும்பியபோது அவருக்கு சர்ப்ரைஸ் கொடுக்கும் வகையில், அவரது மகள் ஆர்கா, அவரது வீட்டுத் தரையில் இலைகள் மற்றும் பூக்களால் ‘வெல்கம் நானா’ என்று எழுதப்பட்ட வாசகத்துடன் வரவேற்றுள்ளார். இதனை புகைப்படமாக எடுத்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ‘16 நாட்கள் கழித்து இனிமையான வரவேற்பு’ என பதிவிட்டுள்ளார்.