ஆஸ்கர் போட்டியிலிருந்து வெளியேறிய 'ஜல்லிக்கட்டு'.! சோகத்தில் ரசிகர்கள்.!

ஆஸ்கர் போட்டியிலிருந்து வெளியேறிய 'ஜல்லிக்கட்டு'.! சோகத்தில் ரசிகர்கள்.!


allikattu-movie-out-of-oscars

93வது ஆஸ்கர் போட்டிக்காக இந்தியா சார்பாக அனுப்பப்பட்ட ஜல்லிக்கட்டு திரைப்படம் இறுதி பரிந்துரை பட்டியலுக்கு தேர்வாகவில்லை. இயக்குநர் கரிஷ்மா தேவ் துபேவின் 'பிட்டு' குறும்படம் ஆஸ்கர் போட்டிக்கு தேர்வாகி உள்ளது. 

மலையாளத்தில் லிஜோ ஜோஸ் பெல்லிச்சேரி இயக்கத்தில் வெளியான படம் ஜல்லிக்கட்டு. இத்திரைப்படம் 2019-ம் ஆண்டு வெளியாகி ரசிகர்கள் மற்றும் விமர்சகர்களின் பாராட்டைப் பெற்றது. மேலும், இத்திரைப்படம் ஆஸ்கர் விருதுக்கு இந்தியா சார்பில் போட்டியிட தேர்வு செய்யப்பட்டது. 

jallikattu

இந்நிலையில், அந்தப் பிரிவில் ஆஸ்கர் விருதுக்காக போட்டியிடும் 15 படங்கள் அடங்கிய இறுதிப்பட்டியல் இன்று வெளியிடப்பட்டது. ஆனால் அதில் ஜல்லிக்கட்டு படம் இடம்பெறவில்லை. இப்படம் ஆஸ்கர் விருது வெல்லும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், இறுதிப்பட்டியலில் கூட இடம்பெறாதது ரசிகர்களுக்கு பெரும் ஏமாற்றத்தை அளித்துள்ளது.