ராஜா ராணி சீரியல் நடிகைக்கு வளைகாப்பு! வைரலாகும் வீடியோ.

ராஜா ராணி சீரியல் நடிகைக்கு வளைகாப்பு! வைரலாகும் வீடியோ.


Aliya sanjiv

குளிர் 100 டிகிரி என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் பிரபலமானவர் நடிகர் சஞ்சீவ். அதன்பிறகு ஒருசில படங்களில் மட்டுமே நடித்த இவர் சொல்லிக்கொள்ளும் அளவிற்கு வெள்ளித்திரையில் பிரபலமாகவில்லை. இந்நிலையில் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ராஜா ராணி தொடரில் கதாநாயகனாக தோன்றினார்.

கார்த்திக் என்ற கதாபாத்திரத்தில் சஞ்சீவ் நடிக்க இவருக்கு ஜோடியாக செண்பா என்ற கதாபாத்திரத்தில் கதையின் நாயகியாக ஆலியா மானசா நடித்துவந்தார். கதையில் கணவன் மனைவியான இவர்கள் நிஜத்திலும் காதலித்து திருமணம் செய்துகொண்டனர்.

sanjiv

இவர்களது திருமணம் சில மாதங்களுக்கு முன்னர் மிகவும் ரகசியமான முறையில் நடைபெற்று பின்னர் அனைவர்க்கும் தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில் தற்போது ஆல்யா மனசா கர்ப்பமாக இருப்பதால் அவருக்கு கோலாகலமாக வளைகாப்பு நடைப்பெற்றுள்ளது. அதனை சஞ்சீவ் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.


View this post on Instagram

Papu ku Baby shower 😍😍😍

A post shared by sanjeev (@sanjeev_karthick) on