
Aliya joined in new serial project
பிரபல தனியார் தொலைக்காட்சியான விஜய் டிவியில் ஒளிபரப்பான ராஜா ராணி என்ற சீரியல் கதாநாயகியாக அறிமுகமானவர் நடிகை ஆல்யா மானசா. அந்த ஒரே சீரியலில் மூலம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்று பிரபலமானார்.
மேலும் அந்த சீரியலில் இணைந்து நடித்த சஞ்சீவ் என்பவரை ஆல்யா காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு அண்மையில் தான் ஒரு பெண் குழந்தை பிறந்தது. மேலும் தற்போது லாக்டவுன் முடிந்து சின்னத்திரை படப்பிடிப்புகள் துவங்கியுள்ளன.
இந்நிலையில் நடிகை ஆல்யா மீண்டும் ஒரு புதிய சீரியலில் நடிக்கவுள்ளதாக புதிய தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளார். அதாவது ஆல்யா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புதிய சீரியலில் தான் நடிக்கவுள்ளதாகவும், அந்த சீரியலை ராஜா ராணி தொடரை இயக்கிய பிரவீன் என்பவர் தான் இயக்க போகிறார் எனவும் பதிவிட்டுள்ளார்.
Advertisement
Advertisement