காஞ்சனா ரீமேக்.! திருநங்கையான பிரபல முன்னணி ஆக்ஷன் நடிகர்.! மிரளவைக்கும் செம மாஸ் புகைப்படம் இதோ!!

காஞ்சனா ரீமேக்.! திருநங்கையான பிரபல முன்னணி ஆக்ஷன் நடிகர்.! மிரளவைக்கும் செம மாஸ் புகைப்படம் இதோ!!


akshaykumar-act-as-transgender-in-kanjana-remake

தமிழ் சினிமாவில் ராகவா லாரன்ஸ் இயக்கத்தில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு வெளியாகி மாபெரும் வெற்றிபெற்ற திரைப்படம் முனி படத்தின் இரண்டாம் பாகமான காஞ்சனா. இப்படத்தில் திருநங்கை கதாபாத்திரத்தில் சரத்குமார் நடித்து இருந்தார். மேலும் ராகவா லாரன்ஸ் ஹீரோவாக நடித்த இப்படத்தில் ராய்லட்சுமி கதாநாயகியாக நடித்திருந்தார்.

மேலும் இவர்களுடன் ஸ்ரீமன், கோவைசரளா, தேவதர்ஷினி ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். மேலும் நொடிக்கு நொடி த்ரில்லர் நிறைந்த  பேய் மற்றும் சமூக கருத்து கொண்ட இப்படம் ரசிகர்களிடையே பெருமளவில் வரவேற்பை பெற்றது. அதனைத் தொடர்ந்து வெளியான காஞ்சனா 3 திரைப்படமும் மாபெரும் வெற்றியை பெற்றது.

kanjanaஇந்நிலையில் இதன் மாபெரும் வெற்றியை தொடர்ந்து 8ஆண்டுகளுக்கு பிறகு ராகவா லாரன்ஸ் காஞ்சனா படத்தை இந்தியில் ரீமேக் செய்ய தீவிரமாக ஈடுபட்டு வருகிறார். பாக்ஸ் ஸ்டார் ஸ்டுடியோஸ் வழங்க சமீரா என்டர்டைன்மென்ட் மற்றும் துஷார் என்டர்டைன்மென்ட் ஹவுஸ் இணைந்து தயாரித்த இப்படத்திற்கு லக்ஷ்மி பாம் என பெயரிடப்பட்டுள்ளது.

இப்படத்தை ஹிந்தியிலும் ராகவா லாரன்ஸ் இயக்குகிறார். இப்படத்தில் அக்ஷய்குமார்,கியாரா அத்வானி ஆகியோர் நடித்துள்ளனர். இந்நிலையில் திருநங்கை கதாபாத்திரத்தில் நடிக்கும் அக்ஷய் குமார் தான் திருநங்கை கதாபாத்திரத்தில் இருக்கும் புகைப்படம் ஒன்றை தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அப்புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலான நிலையில் ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.