சினிமா

என்னது.. பிக்பாஸ் அழகுப்பதுமை அக்ஷரா ஏற்கனவே விஜய் டிவியில் இப்படியொரு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டுள்ளாரா! இது தெரியுமா உங்களுக்கு!!

Summary:

என்னது.. பிக்பாஸ் அழகுப்பதுமை அக்ஷரா ஏற்கனவே விஜய் டிவியில் இப்படியொரு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டுள்ளாரா! இது தெரியுமா உங்களுக்கு!!

விஜய் தொலைக்காட்சியில் ரசிகர்களை பொழுது போக்கும் வகையில் ஏராளமான நிகழ்ச்சிகள் ஒளிபரப்பாகி வருகிறது. அவ்வாறு சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரையும் பெருமளவில் கவர்ந்த நிகழ்ச்சி பிக்பாஸ். இதன் ஐந்தாவது சீசன் கடந்த அக்டோபர் 3ஆம் தேதி பிரம்மாண்டமாக தொடங்கி இரு வாரங்களாக விறுவிறுப்பாக சென்று கொண்டுள்ளது.

இந்த நிகழ்ச்சியில், நடிகர், நடிகைகள், நாட்டுப்புற, நாடக கலைஞர்கள், மாடலிங் துறையை சேர்ந்தவர்கள் என பல்வேறு துறையை சேர்ந்தவர்களும் போட்டியாளர்களாக களமிறங்கியுள்ளனர். பரிச்சயமானவர்களைவிட புதுமுகங்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர். அவ்வாறு ரசிகர்களுக்கு பரிச்சயமில்லாத போட்டியாளர்களில் ஒருவர் அக்ஷரா. மாடல் அழகியான இவருக்கு பிக்பாஸ் நிகழ்ச்சி தொடங்கிய சில நாட்களிலேயே ஆர்மி உருவானது.

ஆனால், இவர் ஏற்கனவே விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ‘வில்லா டு வில்லேஜ்’ என்ற ரியாலிட்டி நிகழ்ச்சியில் கலந்து கொண்டிருக்கிறார்.  மேலும் அந்த நிகழ்ச்சியில் இரண்டாவது இடத்தையும் பிடித்துள்ளார். இதுகுறித்த வீடியோக்கள் தற்போது வைரலாகி வருகிறது. மேலும் அதே நிகழ்ச்சியில் முன்னாள் போட்டியாளரான சனமும் கலந்து கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.


Advertisement