செம்ம மாஸ்! கையில் துப்பாக்கியுடன் மிரட்டலாக அஜித்! AK 61 பட டைட்டில் என்ன தெரியுமா??

செம்ம மாஸ்! கையில் துப்பாக்கியுடன் மிரட்டலாக அஜித்! AK 61 பட டைட்டில் என்ன தெரியுமா??


ak-61-movie-first-look-poster-released

எச்.வினோத் இயக்கத்தில் அஜித் நடிக்கும் 61வது படத்தின் தலைப்பை அசத்தலான போஸ்டருடன் படக்குழு வெளியிட்டுள்ளது.நேர்கொண்ட பார்வை, வலிமை திரைப்படத்தை தொடர்ந்து நடிகர் அஜித்குமார் 3வது முறையாக ஹெச்.வினோத்துடன் கூட்டணியில் இணைந்து தற்போது அவரது 61வது படத்தில் நடித்து வருகிறார்.

இப்படத்தில் அஜித்திற்கு ஜோடியாக மலையாளத்தில் பிரபல நடிகையாக வலம் வரும் மஞ்சு வாரியர் நடித்து வருகிறார். மேலும் சார்பட்டா பரம்பரை படத்தில் பிரபலமான ஜான் கொக்கென், வீரா, யோகிபாபு, மகாநதி சங்கர் போன்ற பலரும் முக்கிய ரோலில் நடிக்கின்றனர். இதன் படப்பிடிப்பு கடந்த மார்ச் மாதம் ஐதராபாத்தில் பூஜையுடன் தொடங்கியது. 

இது வங்கிக் கொள்ளை சம்மந்தப்பட்ட படம் என கூறப்படுகிறது. நீண்ட நாட்களாக AK 61படம் குறித்து எந்த தகவலும் வெளிவராத நிலையில், இன்று படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் டைட்டில் வெளியிடப்பட்டுள்ளது. படத்திற்கு துணிவு என தலைப்பு வைக்கப்பட்டுள்ளது.போஸ்டரில் கையில் துப்பாக்கியோடு அஜித் செம மாஸாக நாற்காலியில் சாய்ந்தபடி இருக்கிறார். இந்த போஸ்டரை ரசிகர்கள் சமூக வலைதளங்களில் பெருமளவில் ட்ரெண்டாக்கி வருகின்றனர்.