பிரபல நடிகர் கூறிய காமெடி! விழுந்து விழுந்து சிரித்த தல அஜித்! வைரலாகும் யாரும் கண்டிராத அரிய கியூட் வீடியோ!ajith-with-surya-video-viral

தமிழ் சினிமாவில் ஏராளமான ஹிட் திரைப்படங்களில் நடித்து தற்போது முன்னணி நடிகராக கொடிகட்டி பறப்பவர் தல அஜித். இவருக்கென ஏராளமான ரசிகர் பட்டாளமே உள்ளது. மேலும் இவரது பிறந்தநாள் மற்றும் படங்கள் வெளியாகும் நாட்களை ரசிகர்கள் கோலாகலமாக திருவிழாக்களை போல கொண்டாடுவர்.

 மேலும் அவரது அரிய புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை தேடிப்பிடித்து அதனை ட்ரெண்டாக்குவர். இந்நிலையில் பல மாஸ் திரைப்படங்களை தொடர்ந்து நடிகர் அஜித் தற்போது ஹெச்.வினோத் இயக்கத்தில் வலிமை என்ற படத்தில் நடித்து வருகிறார்.  இப்படத்தை போனி கபூர் தயாரிக்கிறார். இதன் படப்பிடிப்புகள் கொரோனோவால்  நிறுத்தி நிலையில் தற்போது மீண்டும் துவங்கியுள்ளது.

நடிப்பு மட்டுமின்றி போட்டோகிராபி, கார், பைக் ரேஸ், துப்பாக்கி சுடுதல், அறிவியல் விஞ்ஞானி என பன்முகத் திறமை கொண்டு விளங்கும் தல அஜித்தின் பழைய வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது. அதில் நடிகர் சூர்யா ஏதோ சொல்ல அஜித் கட்டுப்படுத்த முடியாமல் விழுந்து விழுந்து சிரிக்கிறார். இந்த வீடியோவை தல ரசிகர்கள் ரசித்து வைரலாக்கி வருகின்றது.