சினிமா

விசுவாசம் பட தளத்தில் இருந்து வெளியான புகைப்படம் ..! வைரலாகிறது..! ரசிகர்கள் கொண்டாட்டம்...!!

Summary:

ajith-trending-viswasam-shooting-spot

தமிழ் சினிமாவில் மிகவும் பிரபல நடிகர் தான் தல அஜித். இவர் தற்போது விசுவாசம் என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தையும் சிறுத்தை சிவா தான் இயக்குகிறார். இவர்கள் இருவரும் ஏற்கனவே மூன்று படங்கள் இணைந்து படம் செய்திருக்கிறார்கள். 
இரவர்கள் இருவரும் வேதாளம், வீரம், விவேகம் போன்ற படங்களில் ஏற்கனவே இணைத்துள்ளது அனைவருக்கும் தெரிந்ததே. தற்போது இயக்குனர் சிறுத்தை சிவாவுடன் 4 ஆவது முறையாக இணைந்து "விஸ்வாசம் " படத்தில் நடித்து வருகிறார். அஜித்துடன் பில்லா, ஏகன், ஆரம்பம் ஆகிய படங்களில் நடித்த நயன்தாரா தற்போது நான்காவது முறையாக அஜித்துடன் "விசுவாசம் " படத்தில் கைகோர்த்துள்ளார்.   

மேலும் இந்த படத்தில், விவேக், தம்பிராமையா, விவேக், யோகி பாபு , ரோபோ சங்கர், இமான் அண்ணாச்சி, ரமேஷ் திலக்  ஆகியோரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகின்றனர்.இந்த படத்திற்கு இமான் இசையமைப்பாளராக செயல்படுகிறார். சத்ய ஜோதி பிலிம்ஸ் தயாரித்து வெளியிடுகிறது. விவேகம் படத்தை தொடர்ந்து, ரூபன் இப்படத்தையும் எடிட்டிங் செய்கிறார்.  இதையடுத்து, கடந்த 23 ஆம் தேதி அதிகாலை  3:40 மணியளவில் அஜித்தின் விஸ்வாசம் படத்தின் ஃபர்ஸ்ட் லுக்  போஸ்டர் வெளியிடப்பட்டது. 

இந்நிலையில்,  இன்று அஜித் பாக்ஸிங் கூண்டிற்குள் வேட்டி சட்டையுடன் சண்டை போடுவது போன்ற புகைப்படங்கள் சமூகவலைதளத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.  #ViswasamShootingSpot என்ற டேக்கை பயன்படுத்தி அஜித் ரசிகர்கள் தற்போது ட்விட்டரில் ட்ரெண்டிங் செய்து வருகின்றனர். 

தல அஜித் ரசிகர்கள் இந்த புகைப்படத்தை கண்டதும் மிகவும் கொண்டாட்டத்தில் உள்ளார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. 


Advertisement