முதல் காலாண்டில் அமோக வெற்றி துணிவா? வாரிசா?.. வெளியான ரிப்போர்ட்.. இன்ப அதிர்ச்சியில் ரசிகர்கள்.!ajith-thunivu-film-first-victory-on-2023-first-half-yea

 

எச். வினோத் இயக்கத்தில், போனி கபூர் தயாரிப்பில், ஜிப்ரான் இசையில், நடிகர்கள் அஜித் குமார், மஞ்சு வாரியர், சமுத்திரக்கனி, ஜான் கோக்கன் உட்பட பலரின் நடிப்பில் வெளியான திரைப்படம் துணிவு. 

இந்த படம் ரூ.200 கோடி பட்ஜெட்டில் உருவாக்கப்பட்டு, ரூ.250 கோடி வசூல் செய்தது. கடந்த ஜனவரி 11ம் தேதி பொங்கல் பண்டிகையையொட்டி திரைப்படம் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. 

cinema news

தற்போது 2023ம் ஆண்டு பிறந்து ஆறு மாதங்கள் கடந்துவிட்ட நிலையில், முதல் பாதி ஆண்டில் நல்ல வரவேற்பை பெற்ற திரைப்படம் என்ற பெருமையை துணிவு பெற்றுள்ளது. 

இந்த திரைப்படத்தின் தமிழ்நாடு வெளியீடு உரிமைகளை உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனம் பெற்றிருந்தது. தமிழ்நாட்டில் இருந்த திரையரங்குகளின் வசூல் மதுரம் வரவேற்பு நிலவரப்படி துணிவு திரைப்படம் நல்ல வெற்றி அடைந்துள்ளது உறுதி செய்யப்பட்டுள்ளது.

cinema news

அதே வேளையில், விஜய் நடிப்பில், தெலுங்கு இயக்குனர் வம்சி இயக்கத்தில் வெளியான வாரிசு திரைப்படம் ரூ.200 கோடி பட்ஜெட்டில் தயாரிக்கப்பட்டு, ரூ.300 கோடி வசூல் செய்தாலும் விமர்சன ரீதியாக பெரும் பின்னடைவை சந்தித்தது குறிப்பிடத்தக்கது.