சினிமா

விஸ்வாசம் படத்தில் விஜய் பற்றி பேசினாரா அஜித்! வைரலாகும் அந்த வசனம்!

Summary:

Ajith talks about vijay in visuvaasam movie

இயக்குனர் சிவாவுடன் நான்காவது முறையாக கூட்டணி சேர்ந்து விசுவாசம் படத்தில் நடித்துள்ளார் தல அஜித். ஏற்கனவே வீரம், வேதாளம், விவேகம என மூன்று படங்களுக்கும் கலவையான விமர்சனங்களை பெற்றதை அடுத்து விசுவாசம் படம் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகமாகவே இருந்தது.

இந்நிலையில் நேற்று விசுவாசம் படம் வெளியாகி ரசிகர்களிடையே மிகப்பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. அதேபோல சன் பிக்சர்ஸ் தயாரிப்பில், சூப்பர் ஸ்டார் ரஜினி நடித்துள்ள பேட்ட படத்தின் முதல் நாள் வசூலையும் முந்தியுள்ளது விசுவாசம் திரைப்படம்.

இந்நிலையில் விசுவாசம் படத்தில் அஜித், நடிகர் விஜய் பற்றி பேசியுள்ளதாக ஒரு தகவல் வெளியாகியுள்ளது.படத்தில் ஒரு சண்டைக்காட்சியின் போது தன் மகளிடம் அஜித் 'இதுவரை எத்தனை போட்டில ஜெயிச்சுருக்க?' எனக் கேட்பார். அதற்கு அச்சிறுமி, '62' எனப் பதிலளிப்பார். உடனே அஜித் 'அடங்கேப்பா' வசனத்தை சொல்வார்.

ஏற்கனவே விஜய் 62 படங்களில் நடித்து, தற்போது 63 வது படத்தில் நடித்து வருவதால், இந்த வசனம் விஜய்யை பற்றித்தான் பேசியுள்ளதாக அவரது ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் பேசி வருகின்றனர்.
 


Advertisement