விஜய்யை இவ்வாறு புகழ்ந்தாரா அஜித்? உண்மையை கூறிய பிரபல நடிகர்!

விஜய்யை இவ்வாறு புகழ்ந்தாரா அஜித்? உண்மையை கூறிய பிரபல நடிகர்!


ajith-talks-about-vijay-dance

அஜித், விஜய் இவர்கள் இருவருக்குமே ஏகப்பட்ட ரசிகர்கள் உள்ளனர். விஜய் படம் வெளியாகும்போது அஜித் ரசிகர்கள் அதை கலாய்ப்பதும், அஜித் படம் வெளியாகும்போது விஜய் ரசிகர்கள் அதை கலாய்ப்பதும் வழக்கம்தான். ஆனால், ஏதாவது ஒரு பிரச்சனை என்றால் இருதரப்பு ரசிகர்களும் ஒன்றாகிவிடுவார்கள்.

Ajith

அதேபோல விஜய்யும், அஜித்தும் நல்ல நண்பர்கள்தான். இந்நிலையில் நடிகர் விஜய்யின் நடனத்தை பார்த்து புகழ்ந்து தள்ளியுள்ளார் நடிகர் அஜித். இதுகுறித்து நடிகரும், ஆர்.ஜே.வுமான நடிகர் ரமேஷ் திலக் தனியார் நிகழ்ச்சி ஒன்றில் பேசுகையில், ‘’நான் அஜித் சாருடன் நடித்துவிட்டேன். விஜய் சாருடன் ஒரு படமாவது நடித்துவிட வேண்டும். அவர்கள் இருவரும் நண்பர்களாகவே உள்ளனர்.

Ajith

விஸ்வாசம் படப்பிடிப்பின் போது ஒருநாள் நானும் அஜித் சாரும் ஒன்றாக கேரவனில் அமர்ந்திருந்தோம். அந்த நேரம் பார்த்து தொலைக்காட்சியில் விஜய் சார் பாடல் ஒளிபரப்பானது. விஜய் சாரின் நடனத்தை பார்த்த அஜித் சார், விஜய் ஒரு பிறவி நடனக் கலைஞர். சர்வ சாதாரணமாக ஆடுகிறார் என்று புகழ்ந்தார். இதை நடிகர் ரமேஷ் திலக் அந்த பேட்டியில் தெரிவித்தார்.