உறவினர்களால் ஒதுக்கப்பட்ட விக்ரம் ..... தோள் கொடுத்து துணை நின்ற தல!

உறவினர்களால் ஒதுக்கப்பட்ட விக்ரம் ..... தோள் கொடுத்து துணை நின்ற தல!


ajith-supports-vikram-during-his-struggle-times

தமிழ் சினிமாவில் இன்று முன்னணி நடிகராக இருப்பவர் சீயான் விக்ரம். இவர் சினிமாவில்  கஷ்டப்பட்ட அளவிற்கு வேறு எந்த நடிகர்களும் கஷ்டப்பட்டதில்லை என கூறலாம். அந்த அளவிற்கு சினிமாவிற்காக பல கஷ்டங்களையும் துன்பங்களையும் கடந்து வந்து இன்று சாதித்து இருப்பவர்.

ஆரம்ப காலத்தில் கதாநாயகனாக அறிமுகமான ஒரு சில படங்கள் தோல்வியடைந்ததால் சினிமாவில் பல கஷ்டங்களை சந்தித்தவர். நடிகர் பிரசாந்தின் தந்தையான தியாகராஜன் இவரது தாய் மாமா ஆவார். ஆனாலும் குடும்பப் பகையின் காரணமாக அவர் விக்ரமிற்கு எந்த உதவியும் செய்யாமல் இருந்ததோடு அவருக்கு வரும் பட வாய்ப்புகளையும்  தடுத்து வந்திருக்கிறார்.

chiyaanvikram

மேலும் விக்ரம் விபத்தில் சிக்கி படுகாயம் அடைந்திருந்த நிலையில் அவரால் இனி சினிமாவில் சாதிக்கவே முடியாது என வதந்திகளை தியாகராஜனும் அவரது மகன் பிரசாந்தும் பரப்பி வந்ததாகவும் சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இதன் காரணமாக டப்பிங் கலைஞராகவும் விக்ரம் பணியாற்றி வந்திருக்கிறார்.

.

chiyaanvikram

அந்த சூழ்நிலையில்தான் அவருக்கு உல்லாசம் திரைப்பட வாய்ப்பு கிடைத்திருக்கிறது. இரண்டு ஹீரோக்கள் கதை என்பதால் ஒரு ஹீரோவாக அஜித்தை ஒப்பந்தம் செய்துவிட்டு அவரிடம் ஆலோசனை கேட்டு இருக்கின்றனர். அப்போது அஜித் "விக்ரமும் என்னைப் போன்று  சினிமாவில் கஷ்டப்பட்டு சாதிக்க துடிக்கும் ஒரு ஹீரோ என்பதால் அவருக்கும் தனக்கு சமமான ஸ்கிரீன் ஸ்பேஸ் கொடுக்க வேண்டும் என இயக்குனரிடம் தெரிவித்துள்ளார். இந்த தகவல் தற்போது சினிமா வட்டாரங்களில் பரவி வருகிறது. சொந்தக்காரர்களே காலை வாரி விட நினைக்கும் ஒருவருக்கு அஜித் உதவி செய்திருப்பது அவரது ரசிகர்கள் மத்தியில் பெரும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.