அடேங்கப்பா.. வேற மாறி.! குட்டி ரொனால்டோவாக மாறிய அஜித்தின் மகன்.! தீயாய் பரவும் அசத்தல் புகைப்படங்கள்!!

அடேங்கப்பா.. வேற மாறி.! குட்டி ரொனால்டோவாக மாறிய அஜித்தின் மகன்.! தீயாய் பரவும் அசத்தல் புகைப்படங்கள்!!



Ajith son advik football playing photos viral

தமிழ் சினிமாவில் ஏராளமான மாஸ், சூப்பர் ஹிட் திரைப்படங்களில் நடித்து முன்னணி நடிகராக கொடி கட்டி பறப்பவர் நடிகர் அஜித். இறுதியாக இவரது நடிப்பில் வெளிவந்த துணிவு திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. அடுத்ததாக அஜித் விடாமுயற்சி என்ற திரைப்படத்தில்  நடிக்கிறார்.

நடிகர் அஜித் நடிப்பு மட்டுமின்றி  பைக் ரேஸ், டிரோன், சமையல், புகைப்படம் எடுத்தல், துப்பாக்கி சுடுதல் என பல திறமைகளை கொண்டவர். அவர் உலகளவில் பைக் டூர் செல்ல வேண்டும் என்ற தனது ஆசையை தற்போது நிறைவேற்றி வருகிறார். அஜித்தின் மனைவி நடிகை ஷாலினி. அவர்களுக்கு அனோஷ்கா, ஆத்விக் என இரு பிள்ளைகள் உள்ளனர்.

Ajith

அவர்களில் ஆத்விக் அஜித் தற்போது கால்பந்தாட்டத்தில் கலக்கி வருகிறார். அதாவது அவர் சென்னையின் எஃப்சி அணியில் கால்பந்தாட்ட பயிற்சியை மேற்கொண்டு வருகிறார். இந்நிலையில் அவர் கால்பந்தாட்ட விளையாட்டை விளையாடும் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாக பரவி வருகிறது. இதனை கண்ட ரசிகர்கள் புலிக்கு பிறந்தது பூனையாகுமா?  குட்டி ரொனால்டோ என கமெண்ட் செய்து வருகின்றனர்.

Ajith

Ajith