சினிமா

வாவ்.. தல அஜித்- ஷாலினியோட புதிய செல்பியை பார்த்தீர்களா! செம கியூட்ல.. லைக்குகளை குவிக்கும் ரசிகர்கள்!!

Summary:

தமிழ் சினிமாவில் மிகவும் பிரபலமான நட்சத்திர ஜோடிகளாக இருப்பவர்கள் அஜித் மற்றும்  ஷாலி

தமிழ் சினிமாவில் மிகவும் பிரபலமான நட்சத்திர ஜோடிகளாக இருப்பவர்கள் அஜித் மற்றும் ஷாலினி. தமிழில் ஏராளமான ஹிட் திரைப்படங்களில் நடித்து தற்போது உச்ச நட்சத்திரமாக ரசிகர்கள் மத்தியில் கொடிகட்டி பறப்பவர் தல அஜித். இவருக்கென ஏராளமான ரசிகர் பட்டாளமே உள்ளது. அஜித் தற்போது வினோத் இயக்கத்தில் வலிமை படத்தில் நடித்து வருகிறார்.

மேலும் குழந்தை நட்சத்திரமாக தனது நடிப்பு பயணத்தை தொடங்கிய நடிகை ஷாலினி, விஜய், அஜித், பிரசாந்த் என சில முன்னணி நடிகர்களின் படங்களில் கதாநாயகியாக நடித்து ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார்.  தல அஜித் அமர்க்களம் படத்தில் நடித்தபோது நடிகை ஷாலினியுடன் காதல் ஏற்பட்டு இருவரும் திருமணம் செய்துகொண்டனர். இவர்களுக்கு அனோஷ்கா மற்றும் ஆத்விக் என இரு குழந்தைகள் உள்ளனர்.

இந்நிலையில், நடிகை ஷாலினி, தற்போது நடிகர் அஜித்துடன் எடுத்த செல்பி புகைப்படம் ஒன்று சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது. இந்தப் புகைப்படத்தை அஜித் ரசிகர்கள் வைரலாக்கி வருகின்றனர்.
 


Advertisement