சினிமா

தல அஜித்தா இது?? இன்ப அதிர்ச்சியில் ரசிகர்கள்! புதிய கெட்டப்பில் இணையத்தை கலக்கும் செல்பி புகைப்படங்கள்!!

Summary:

தமிழ் சினிமாவில் ஏராளமான ஹிட் திரைப்படங்களில் நடித்து முன்னணி நடிகராக கொடிகட்டி பறப்பவர் த

தமிழ் சினிமாவில் ஏராளமான ஹிட் திரைப்படங்களில் நடித்து முன்னணி நடிகராக கொடிகட்டி பறப்பவர் தல அஜித். இவருக்கென பெரும் ரசிகர்கள் பட்டாளமே உள்ளது. இவர் படம் வெளியாகும் நாட்கள் மற்றும் பிறந்தநாளை ரசிகர்கள் கோலாகலமாக திருவிழாக்களை போல கொண்டாடி வருகின்றனர். மேலும் அவர் என்ன செய்தாலும் அதனை ரசிகர்கள் ட்ரெண்டாக்கி வருகின்றனர்.

இந்நிலையில் நடிகர் அஜித் தற்போது போனி கபூர் தயாரிப்பில் தனது 60 வது படமான வலிமை திரைப்படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தில் அஜித் ஆக்சன் கலந்த போலீஸ் அதிகாரியாக நடித்து வருவதாக கூறப்படுகிறது. இதன் படப்பிடிப்புகள் ஓரளவுக்கு முடிவுக்கு வந்துள்ளது. சில சண்டைக் காட்சிகள் மட்டுமே படமாக்கப்பட வேண்டியுள்ளது. இதனைத் தொடர்ந்து அஜித்தின் அடுத்த படத்தையும் ஹெச் வினோத் இயக்கவுள்ளதாக கூறப்படுகிறது.

மேலும் வலிமை படத்தின் அப்டேட்டுக்காக ரசிகர்கள் பெரும் எதிர்பார்ப்பில் உள்ளனர். இந்நிலையில் நடிகர் அஜித் தனது ரசிகர்ளுடன் எடுத்த செல்பி புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. அதில் அவர் மொட்டையடித்து, கருப்புநிற கூலிங் கிளாஸ் அணிந்து வேறு லுக்கில் உள்ளார். இந்த புகைப்படங்கள் சென்னை ரைபில் கிளப்பிற்கு அஜித் வந்தபோது  எடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது. 


Advertisement