சினிமா

இதுமாதிரியான ஆட்களிடம் எச்சிரிக்கையாக இருங்கள்! நடிகர்அஜித் வெளியிட்ட பரபரப்பு அறிக்கை!

Summary:

Ajith says dont believe some persion who used my namep

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான அஜித் தற்போது வலிமை படத்தில் நடித்து வருகிறார். இந்நிலையில் தனது பிரதிநிதி என கூறி ஏமாற்றி சிலர் ஆதாயம் தேடுவதாகவும்,  அவர்களை நம்ப வேண்டாம் எனவும் நடிகர் அஜித் வழக்கறிஞர் மூலம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அந்த அறிக்கையில், சமீப காலமாக சில நபர்கள் பொதுவெளியில் அஜித்தின் பிரதிநிதி போல அவரது அனுமதியின்றி தங்களை முன்னிலைப்படுத்தி வருவதாகவும்,  பல வருடங்களாக அஜித்துடன் பணியாற்றி வரும் அவரது மேலாளர் சுரேஷ் சந்திரா மட்டுமே அஜித்தின் அனுமதி பெற்ற பிரதிநிதி எனவும் கூறப்பட்டுள்ளது.

மேலும் அஜித்தின் பெயரை பயன்படுத்தி தனிநபரோ அல்லது நிறுவனமோ அணுகினால் உடனே அதுகுறித்து சுரேஷ் சந்திராவிடம் தெரிவிக்க வேண்டும் என வேண்டுகோள் விடப்பட்டுள்ளது. இதையும் மீறி அத்தகைய நபர்களிடம் யாரும் தொழில் மற்றும் வர்த்தக ரீதியாக தொடர்பில் இருந்தால் அதற்கும் அஜித்திற்கு எந்த விதத்திலும் பொறுப்பு இல்லை.  இத்தகைய நபர்களிடம் பொதுமக்கள் எச்சரிக்கையாக இருக்கும்படி கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.


Advertisement