தமிழகம் சினிமா

விஜய் வீட்டில் ஐடி ரெய்டு! பல ஆண்டுகளுக்கு முன்னர் அஜித் கூறிய கருத்துகள் தற்போது வைரல்!

Summary:

ajith past comment viral now

விஜய் நடித்த பிகில் படத்தை தயாரித்த ஏஜிஎஸ் நிறுவனத்திற்கு சொந்தமான 20-க்கும் மேற்பட்ட இடங்களில் வருமான வரித்துறை சோதனை நடத்தினர். அதேபோல், படம் தயாரிக்க கடன் கொடுத்த பைனான்சியர் அன்புச்செழியன் வீடு மற்றும் அலுவலகங்களிலும் சோதனை நடைபெற்றது.

இதனையடுத்து நெய்வேலியில் நடந்த ‘மாஸ்டர்’ படப்பிடிப்பு தளத்துக்கு சென்று விஜய்யை விசாரணைக்கு வருமான வரித்துறையினர் அழைத்து வந்தனர். பின்னர் அங்கிருந்து அவரது காரிலேயே சென்னை அழைத்து வந்து, இரவு முழுவதும் வருமான வரித்துறையினர் விசாரணை நடத்தியுள்ளனர். 

இந்நிலையில், தனது வீட்டில் நடத்தப்பட்ட ஐடி ரெய்டு குறித்து பல ஆண்டுகளுக்கு முன்னர் அஜித் கிண்டலாகக் குறிப்பிட்டது சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. பல ஆண்டுகளுக்கு முன்பு வருமான வரித் துறையினரின் உதவியால் வீட்டில் காணாமல்போன பொருட்கள் அனைத்தும் கிடைத்துவிட்டது என்றும், ஆனால் வரி ஏய்ப்பு ஏதும் கண்டறியப்படவில்லை என்று அஜித் பேட்டியளித்திருந்தார்.

மேலும், வெற்றிபெற்ற மனிதர்கள் மீது வரிகளை விதிப்பதை விட, மக்கள் பணத்தை கொள்ளையடித்த அரசியல்வாதிகளிடம் பறிமுதல் செய்தால் நாட்டின் பிரச்சனைகள் தீர்ந்துவிடும் என்றும் அஜீத் பேட்டியளித்திருந்த தற்போது ரசிகர்கள் சுட்டிக்காட்டி வருகின்றனர். அந்த இரண்டு பேட்டிகளும் இப்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகியுள்ளன.
 


Advertisement