ஆசையாக அழைத்து பேன்டீன் ஷாம்பு கொடுத்த வைரமுத்து - புயலை கிளப்பிய பாடகி சுசித்ரா.!
விடாமுயற்சி படப்பிடிப்புக்கு புறப்பட்டார் நடிகர் அஜித்.!
தமிழ் சினிமாவை பொறுத்தவரையில் முன்னணி நடிகராக வலம் வந்து கொண்டிருக்கும் நடிகர் அஜித்குமார், தற்போது விடாமுயற்சி என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த திரைப்படத்தை மகிழ் திருமேனி என்பவர் இயக்கி வருகிறார். இந்த திரைப்படத்தில் அர்ஜுன், பிரியா பவானி சங்கர், திரிஷா, ரெஜினா உள்ளிட்ட பல்வேறு நட்சத்திரங்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார்கள்.
ரசிகர்களின் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுக்கிடையே உருவாகி வரும் இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு கடந்த 2 வாரங்களுக்கு முன்னர் தற்காலிகமாக நிறுத்தப்பட்டது.அசர்பைஜானிலிருந்து இந்த திரைப்படக் குழுவினர் சென்னை திரும்பியிருக்கிறார்கள். தற்போது மீண்டும் இந்த திரைப்படத்தின் படபிடிப்பு தொடங்கியிருக்கிறது. ஆகவே தற்போது மீண்டும் எல்லோரும் அஜர்பைஜானுக்கு கிளம்பி சென்றுள்ளனர்.
நடிகர் அஜித்குமார் இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பில் பங்கேற்பதற்காக கிளம்பி சென்றார். இந்த நிலையில், அவர் சென்னை விமான நிலையத்திலிருக்கும் வீடியோ ஒன்றை அவருடைய ரசிகர்கள் சமூக வலைதளத்தில் வைரலாக பரப்பி வருகிறார்கள்.