மீண்டும் தாமதமாகும் அஜித்தின் விடாமுயற்சி படத்தின் படப்பிடிப்பு.. இது தான் காரணமா?

மீண்டும் தாமதமாகும் அஜித்தின் விடாமுயற்சி படத்தின் படப்பிடிப்பு.. இது தான் காரணமா?



Ajith in vidamuyarchi movie shooting delay

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகரான அஜித்குமார் தற்போது இயக்குனர் மகிழ் திருமேனி இயக்கத்தில் விடாமுயற்சி என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். என்ற திரைப்படத்தை லைக்கா ப்ரொடக்ஷன்ஸ் நிறுவனம் தயாரிக்க, அனிருத் இசையமைக்கிறார்.

Ajith Kumar

மேலும், இந்த படத்தில் அஜித்துக்கு ஜோடியாக திரிஷாவும், வில்லன் கதாபாத்திரத்தில் ஆக்ஷன் கிங் அர்ஜுனும் நடித்து வருகின்றனர். சமீபத்தில் தான் இந்த படத்தின் படப்பிடிப்பு தொடங்கப்பட்டு விறுவிறுப்பாக நடைபெற்று வந்தது.

Ajith Kumar

இந்த நிலையில் தற்போது விடாமுயற்சி படத்தின் படப்பிடிப்பு நடைபெறாமல் இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி இந்த படத்திற்கான செட் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருவதால் படப்பிடிப்பு தொடங்குவதில் தாமதம் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.