அஜித்தின் விடாமுயற்சி திரைப்படம் எப்போது ரிலீஸ்? வெளியான அசத்தல் தகவல்!

அஜித்தின் விடாமுயற்சி திரைப்படம் எப்போது ரிலீஸ்? வெளியான அசத்தல் தகவல்!



Ajith in vidamuyarchi movie release date

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருப்பவர் அஜித்குமார். தற்போது இவர் இயக்குனர் மகிழ் திருமேனி இயக்கத்தில் விடாமுயற்சி என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த திரைப்படத்தை லைக்கா ப்ரொடக்ஷன்ஸ் ப்ரொடக்ஷன்ஸ் நிறுவனம் தயாரிக்க, ராக் ஸ்டார் அனிருத் இசையமைக்கிறார்.

Vidamuyarchi

மேலும், இந்த படத்தில் அஜித்துக்கு ஜோடியாக திரிஷாவும், வில்லன் கதாபாத்திரத்தில் ஆக்சன் கிங் அர்ஜுனன் நடிக்கின்றனர். மேலும் இந்த படத்தில் அர்ஜுன் தாஸ், அருண் விஜய், ரெஜினா மற்றும் ஆரவ் உள்ளிட்ட திரைப்பிரபலங்கள் பலரும் நடிக்கின்றனர்.

இந்த படத்தின் படப்பிடிப்பு கடந்த சில மாதங்களுக்கு முன்பு அஜர்பைஜான் நாட்டில் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வந்த நிலையில், முதற்கட்ட படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளது. இதனையடுத்து இந்த படத்தின் அடுத்த கட்ட படப்பிடிப்பு சென்னையில் நடைபெறும் என கூறப்படுகிறது.

Vidamuyarchi

இதனையடுத்து விடாமுயற்சி திரைப்படம் இந்த ஆண்டு தீபாவளிக்கு ரிலீஸ் செய்ய படக்குழு திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி வருகிறது. இதற்காக படக்குழு தீவிரம் காட்டி வருவதாக கூறப்படுகிறது.