மாஸாக களமிறங்கும் தல.. அல்டிமேட் எப்போதுமே அல்டிமேட் தான்..! ரசிகர்களுக்கு உற்சாக செய்தி..!!ajith going to gym for new movie

இறுதிக்கட்ட படப்பிடிற்காக தனது உடலை கட்டுகோப்பாக்க நடிகர் அஜித் உற்பயிற்சிகள் செய்து வருவதாக தகவல் கிடைத்துள்ளது. அதற்காகத்தான் லண்டனில் இருந்து இந்தியா வந்துள்ளார் என்று கூறப்படுகிறது.

இயக்குனர் வினோத் இயக்கத்தில் போனி கபூர் தயாரிப்பில் நடிகர் அஜித் நடிக்கும் புதிய படத்தின் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இவர்கள் மூவரின் கூட்டணியில் முன்பே வலிமை திரைப்படம் வெளியாகி ரசிகர்களின் மிகுந்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் வெளியாகி, பூர்த்தி செய்ய இயலாமல்போனது. 

இதன் காரணமாக இந்த திரைப்படத்தை ரசிகர்களுக்கு பிடித்ததாகவும், வெற்றிபடமாகவும் கொடுக்க வேண்டும் என்ற எண்ணத்தில் இயக்குனர் வினோத் கடுமையாக உழைத்து வருகிறார். இந்த படத்தின் சூட்டிங் பெரும்பகுதி முடிந்துவிட்ட நிலையில், அஜித்தின் காட்சிகள் பெரும்பாலானவை எடுக்கப்பட்டுள்ளன. 

new movie

இதன் காரணமாகவே அவர் லண்டனுக்கு சுற்றுலா சென்றுள்ளார். தற்போது அங்கு எடுக்கப்பட்ட பலவிதமான புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. இந்த நிலையில் தல அஜித் தனது பகுதியின் இறுதிகட்ட படப்பிடிப்பிற்காக இந்தியா வந்துவிட்டார். 

முன்பே இருந்த கெட்டப்பில் இல்லாமல் வேறுவிதமான ஒரு கெட்டப்பில் இளமையான தோற்றத்தில் இப்படத்தில் நடித்துள்ளாராம். அவர் லண்டனில் இருந்து திரும்பியவுடன் அடுத்த கட்டமாக தனது உடலை கட்டுக்கோப்பாக வைப்பதற்கு உடற்பயிற்சி மேற்கொண்டு வருவதாக தகவல்கள் வெளிவந்த வண்ணம் இருக்கின்றன. இரண்டு வார கடுமையான உடற்பயிற்சிக்கு பிறகு தான் இறுதிகட்ட படப்பிடிப்பில் கலந்துகொள்ள இருக்கிறார் என்று கூறப்படுகிறது.