ரசிகர்களுடன் செஃல்பி புகைப்படம் எடுக்க தயாராக நின்ற தல அஜித்! ரசிகர் சொன்ன ஒத்த வார்த்தையால் கடுப்பாகி சென்ற அஜித்! வைரல் வீடியோ!ajith-getting-angry-for-fans-words

தமிழ் சினிமாவில் ஏராளமான வெற்றி திரைப்படங்களில் நடித்து தற்போது முன்னணி நடிகராக வலம்வருபவர் தான் தல அஜித். இவருக்கென தமிழகம் மட்டுமின்றி உலகம் முழுவதும் அதிகப்படியான ரசிகர் பட்டாளமே உள்ளது. தல அஜித் நடித்து வெளியாகும் முதல் நாள் காட்சிகளை பார்க்க திரையரங்குகளுக்கு சென்றால் திரையரங்கமே அதிரும் அளவிற்கு விசில் சத்தம் இருக்கும்.


தல அஜித்துக்கு பல பிரபல நடிகர், நடிகையர்களே பெரும் ரசிகர்களாக உள்ளனர். மேலும் அவருடன் நடிக்க பல நடிகைகளும் காத்திருக்கின்றனர். மேலும், இவரது ஒவ்வொரு படங்கள் வெளியாகும் நாட்களையும், அவரது பிறந்தநாளையும்  ரசிகர்கள் கோலாகலமாக திருவிழாக்களை போல கொண்டாடி வருகின்றனர். இந்தநிலையில் அஜித் அவர்களின் நடிப்பில் “தல 60” படத்தின் படப்பிடிப்பு தொடங்கிவிட்டது என்று இணையதளங்களில் அவரின் போலீஸ் கெட்டப்பில் இருக்கும் புகைப்படம் வெளியானது.

சமீபத்தில் கோயம்புத்தூரில் நடந்த மாநில அளவிலான 45 ஆவது துப்பாக்கிச் சுடுதல் போட்டியில் கலந்துக் கொண்டு தேசிய அளவிலான போட்டிக்குத் தகுதி பெற்றார். இந்தநிலையில்  டெல்லியில் உள்ள டாக்டர் கர்னி சிங் துப்பாக்கிச்சுடுதல் பயிற்சி மையத்தில், 10 மீட்டருக்கான போட்டியில் கலந்து கலந்து கொண்டார். பின்னர் அங்கிருந்து சென்னை விமான நிலையத்திற்கு வந்துள்ளார்.

சென்னை வந்த அஜித்தை ரசிகர்கள் சூழ்ந்து கொண்டு கடவுளே என்று கோஷம் எழுப்பியதைத் தொடர்ந்து வருத்தத்துடன் கோபமடைந்த நிலையில், அங்கிருந்து வேகமாக சென்றுள்ளார். ரசிகர்களுடன்  செஃல்பி எடுத்துக் கொள்வதை ரசிகர்களை விட அதிகளவில் விரும்புவார் தல அஜித். ஆனால் தன்னை ஏன் கடவுள் என அழைக்கிறார்கள் என்று வருத்தத்துடனேயே அங்கிருந்து புறப்பட்டுச் சென்றுள்ளார்.