BREAKING: மீண்டும் மீண்டுமா.... ஜனநாயகன் பட வழக்கில் உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு..!!
அஜித் விலை உயர்ந்த காரை பரிசளித்த அந்த நபர் யார் தெரியுமா.. அதிர்ச்சியில் ரசிகர்கள்.?
தமிழ் சினிமாவில் தொடர்ந்து பல வெற்றி படங்களை அளித்து தமிழில் முன்னணி நடிகராக இருப்பவர் அஜித். இவரின் நடிப்பு திறமையால் ரசிகர்களை கவர்ந்து தல என்றும் ஏகே என்றும் ரசிகர்கள் இவரை அன்போடு அழைத்து வருகின்றனர்.

மேலும் சமீபத்தில் அஜித் நடித்து வெளியான 'துணிவு' திரைப்படம் மிகப்பெரிய வெற்றியை அடைந்தது. இதனையடுத்த அஜித்தின் 63வது படமான 'விடாமுயற்சி' திரைப்படம் படப்பிடிப்பு ஆரம்பமாக உள்ளது.
தற்போது நடிகர் அஜித் உலகம் முழுவதும் பைக்கில் டூர் சென்று இருக்கிறார். இந்த சுற்றுலா முடிந்ததும் இப்படத்தின் படப்பிடிப்பு ஆரம்பமாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. சமீபத்தில் நடிகர் அஜித் 'ஏகே மோட்டோ ரைடு' எனும் சுற்றுலா நிறுவனத்தை தொடங்கி இருக்கிறார்.

இது போன்ற நிலையில் அஜித்தின் நண்பரான சுகத் சர்பதிக்கு bmw கார் ஒன்சை பரிசளித்திருக்கிறார். இந்த புகைப்படங்கள் தற்போது இன்ஸ்டாகிராமில் வைரலாக பரவி வருகின்றது.