காக்க காக்க படத்தில் முதலில் ஹீரோவாக நடிக்க இருந்தது இந்த முன்னணி நடிகர்கள் தானா... இப்படி மிஸ் பண்ணிட்டிங்களே!!

காக்க காக்க படத்தில் முதலில் ஹீரோவாக நடிக்க இருந்தது இந்த முன்னணி நடிகர்கள் தானா... இப்படி மிஸ் பண்ணிட்டிங்களே!!


Ajith First choice for kaka kakka movie

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களுள் ஒருவராக வலம் வருபவர் நடிகர் சூர்யா. இவருக்கு என ஏகப்பட்ட ரசிகர் பட்டாளமே உள்ளது. மேலும் இவர் தமிழ் சினிமாவில் ஏராளமான சூப்பர் ஹிட் மற்றும் மாஸ் திரைப்படங்களில் நடித்துள்ளார். சூர்யா நடிப்பில் வெளிவந்த ஜெய் பீம் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பை பெற்று பிளாக்பஸ்டர் ஹிட்டானது.

இந்நிலையில் கடந்த 2003 ஆம் ஆண்டு இயக்குனர் கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் வெளிவந்து மாபெரும் வெற்றி பெற்ற திரைப்படங்களில் ஒன்று காக்க காக்க. இப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இப்படத்தில் கதாநாயகனாக சூர்யா நடித்திருந்தார்.

Suriya

சூர்யாவின் திரைவாழ்க்கையில் காக்க காக்க படம் ஒரு திருப்பு முனையாக அமைந்தது. இப்படத்தில் காவல் துறை அதிகாரியாக தனது மிரட்டலான நடிப்பை வெளிபடுத்தியிருந்தார் சூர்யா.

ஆனால் இப்படத்தில் நடிப்பதற்கு முதலில் நடிகர் அஜித்தை தான் தேர்வு செய்திருந்தாராம் இயக்குனர். அவர் நோ சொன்ன பிறகு விக்ரமிடம் கூறியுள்ளார். அவரும் இந்த கதையை நிராகரித்துள்ளார். கடைசியாக தான் சூர்யாவிடம் இப்படத்தின் கதையை சொல்லி ஓகே செய்துள்ளாராம் கவுதம் மேனன்.